“பாத காணிக்கை” படத்தின் இந்த பாடலை கவனித்திருக்கிறீர்களா?

0
220
#image_title

பாதகாணிக்கை படம் 1962 ஆம் ஆண்டு வெளிவந்தது இதில் ஜெமினிகணேசன் சாவித்திரி எம் ஆர் ராதா அசோகன் விஜயகுமாரி சந்திரபாபு நடித்துள்ளனர்.

 

சொத்துக்காக எப்படி இரு குடும்பம் பிரிந்தது மற்றும் இணைந்தது என்பதை பற்றி தான் இந்த கதை.

 

இந்த படத்தில் மொத்தம் எட்டு பாடல்கள் இருக்கும். அதில் இரண்டு இன்றும் காலத்தில் நீங்காதவை என்று சொல்லலாம்.

 

ஒன்று “எட்டடுக்கு மாளிகையில் ஏற்றி வைத்த” தமிழ் பாடலை சுசிலா அவர்கள் பாடியிருப்பார்கள் இந்த பாடலை கண்ணதாசன் எழுதிக் கொடுத்துள்ளார்.

மற்றொன்று “வீடு வரை உறவு காடு வரை ” டி எம் சௌந்தரராஜன் இந்த பாடலை கலக்கியிருப்பார். மற்றவர்களுக்கு புரியும் வகையில் கண்ணதாசன் தான் எழுதிக் கொடுத்துள்ளார்.

 

எட்டடுக்கு மாளிகையில் ஏற்றி வைத்த இந்த பாடல் இயக்குனரான கீழ சங்கருக்கு இது புரியவில்லையாம். ரெக்கார்டிங்கில் கூட இவருக்கு சந்தேகம் என ஆனால் கேட்டால் ஏதாவது நினைத்துக் கொள்வார் என்று கண்ணதாசனிடம் கேட்கவில்லையாம்.

 

அப்பொழுது இந்த படம் வெளிவந்து 100 நாட்களைக் கடந்து வெள்ளி விழா கொண்டாடும் பொழுது இந்த சந்தேகத்தை கண்ணதாசன் இடம் கேட்டாராம் படத்தில் ஹீரோவுக்கு எட்டடுக்கு மாளிகையும் கிடையாது ஹீரோயினிக்கும் எட்டடுக்கு மாளிகையும் கிடையாது இதில் இந்த பாட்டில் எட்டடுக்கு மாளிகை என்பது எங்கே வருகிறது என்று கேட்டாராம்.

 

அதில் அவர் சொன்ன பதில் மிகவும் வியப்புக்குள்ளாகியதாக இருந்ததாம் அப்பொழுதுதான் அவருக்கு எட்டடுக்கு மாளிகை என்பது என்ன என்பதை பற்றி தெரிந்ததாம்:

 

எட்டடுக்கு மாளிகை என்பது ஒரு மனிதனின் உடல். ஒவ்வொரு மனிதனின்உடம்பும் எட்டு ஜான் அளவிற்கு தான் அவர்களது உடல் இருக்குமாம்? அதுதான் எட்டடுக்கு மாளிகை என்று கவிஞர் கண்ணதாசன் குறிப்பிட்டுள்ளார். இதைக் கேட்டு வியந்து போய் அப்படியே நின்று விட்டாராம் கே சங்கர்.

 

இதில் அசோக்கனின் நடிப்பும் எம் ஆர் ராதாவின் வில்லத்தனமும் சாவித்திரியின் அழகிய முக பாவனைகளும் இந்த படத்தை 100 நாட்கள் கடந்து ஓட வைத்துள்ளது. இன்னும் இதில் வந்த பாடல்கள் அனைத்தும் மனதை வருடும் அளவிற்கு உள்ளது.