நம் நாட்டில் ஜோதிடம் நம்பிக்கைக்கு உரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.கை ரேகை ஜோதிடம் பிரபலமான ஒன்றாக இருக்கின்றது.அதேபோல் கால் விரல்களை வைத்து நாம் எப்படி பட்டவர்கள் என்பதை ஜோதிடம் மூலம் அறிந்து கொள்ள முடியும்.
கால் கட்டை விரல் மற்றும் பக்கத்தில் இருக்கும் நான்கு விரல்களின் அளவை வைத்து நாம் யார் நம் எதிர்காலம் எப்படி இருக்குமென்று அறிந்து கொள்ள முடியும்.
நம் கால் விரல் சொல்லும் எதிர்கால பலன்கள்:
கால் கட்டை விரல் மற்றும் அதற்கு பக்கத்தில் இருக்கும் இரு விரல்கள் ஒரே அளவில் இருந்தால் பயணங்களை அதிகமாக விரும்புவார்கள் என்று அர்த்தம்.இப்படி விரல் அமைப்பு கொண்டவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் சுதந்திரமாக வாழ விரும்புவார்கள் என்று அர்த்தம்.
கால் கட்டை விரல் மட்டும் பெரியதாகவும் அதற்கு அடுத்து இருக்கும் நான்கு விரல்களும் சிறியதாகவும் இருப்பவர்கள் எளிமையாக வாழ்க்கையை வாழ விரும்புவார்கள்.கலைதிறன் கொண்டவர்களாக இருப்பார்கள்.இயற்கை சார்ந்த சூழலை அதிகமாக விரும்புவார்கள்.
கால் கட்டை விரலுக்கு அருகில் இருக்கின்ற விரல் மட்டும் பெரியதாகவும் கட்டை விரல் மற்றும் மூன்றாவது விரல் ஒரே அளவிலும் இருந்தால் அவர்கள் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியை அனுபபிப்பார்கள் என்று அர்த்தம்.தன்னுடன் இருப்பவர்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளக் கூடியவர்கள்.
காலில் இரண்டாவது விரல் பெரியதாகவும் கால் கட்டை விரல் மற்றும் மூன்று,நான்கு,ஐந்து ஆகிய நான்கு விரல் சிறியதாகவும் இருந்தால் அதாவது கால் கட்டை விரல் மற்றும் அருகில் இருக்கின்ற விரல் ஏறு முகத்திலும் மற்ற விரல்கள் இறங்கு முகத்திலும் இருந்தால் அவர்கள் எடுக்கும் முடிவு சரியானதாக இருக்கும் என்று அர்த்தம்.