இது தெரியுமா? சாப்பிட்ட தட்டில் இதை செய்தால் தரித்திரம் பிடிக்கும்?

Photo of author

By Divya

இது தெரியுமா? சாப்பிட்ட தட்டில் இதை செய்தால் தரித்திரம் பிடிக்கும்?

Divya

நாம் அன்றாட வாழ்வில் செய்யும் சில தவறுகள் தரித்திரம் உண்டாக காரணமாகிவிடும்.நமக்கு தரித்திரம் பிடித்தால் நினைத்த காரியங்கள் தடைபடும்.நல்ல செயல்கள் நடக்க காலதாமதமாகும்.தரித்திரம் பிடித்தால் உணவிற்கு கஷ்டப்படும் நிலை ஏற்படும்.குறிப்பாக நாம் சாப்பிடும் பொழுது செய்யக் கூடிய விஷயங்களால் மட்டுமே அதிக தரித்திரம் பிடிக்கிறது.நாம் சில விஷயங்களை மதிக்காமல் செய்வதால் தரித்திரம் பிடிக்கிறது.

நாம் மடியில் தட்டு வைத்தபடி சாப்பிட்டால் தரித்திரம் பிடிக்கும் என்று பெரியவர்கள் சொல்கின்றனர்.சிலர் சாப்பிட்ட தட்டை கழுவி சுத்தம் செய்யாமல் இருப்பர்.இந்த பழக்கம் இருப்பவர்களுக்கு தரித்திரம் பிடிக்கும்.அதேபோல் இலையை வலித்து சாப்பிடுதல்,கை விரல்களை சூப்பி சாப்பிடுதல் போன்றவற்றை செய்பவர்களுக்கு தரித்திரம் பிடிக்கும்.ஒழுக்கம் இல்லாமல் சாப்பிடுதல்,உணவிற்கு மரியாதை கொடுக்கலாமல் இருந்தால் தரித்திரம் பிடித்துக் கொள்ளும்.

அதேபோல் சாப்பிட்டு தட்டை கையில் ஏந்தியபடி சாப்பிடக் கூடாது.சாப்பிடும் தட்டில் எச்சில் துப்புதல்,தட்டில் கால் படுதல் போன்ற செயல்களை செய்தால் தரித்திரம் பிடிக்கும்.உணவை வீணாக்குதல்,சாப்பாட்டு தட்டை சுத்தமாக கழுவாமல் இருத்தல் போன்றவை தரித்திரம் பிடிப்பதற்கான செயல்கள்
ஆகும்.

எனவே இதுபோன்ற கெட்ட செயல்களை தவிர்த்துவிடுவது உங்களுக்கு நல்லது.உணவிற்கு மட்டுமின்றி சாப்பிடும் தட்டிற்கும் மரியாதை கொடுக்க வேண்டும்.உணவு நமக்கு உயிர் வாழ தேவைப்படும் அடிப்படை விஷயமாகும்.அப்படி இருக்கையில் நாம் உணவிற்கு மரியாதை கொடுத்தால் மட்டுமே உணவு பஞ்சம் வராமல் இருக்கும்.எனவே இனி சாப்பிடும் போது மேலே சொல்லப்பட்டுள்ள தவறுகளை செய்யாமல் இருங்கள்.