30 நாட்களில் உடல் எடையை இப்படியெல்லாம் அதிகரிக்க முடியும்னு தெரிஞ்சா?? உடனே ட்ரை பண்ணுவீங்க!!

Photo of author

By Parthipan K

30 நாட்களில் உடல் எடையை இப்படியெல்லாம் அதிகரிக்க முடியும்னு தெரிஞ்சா?? உடனே ட்ரை பண்ணுவீங்க!!

Parthipan K

30 நாட்களில் உடல் எடையை இப்படியெல்லாம் அதிகரிக்க முடியும்னு தெரிஞ்சா?? உடனே ட்ரை பண்ணுவீங்க!!

மெல்லிய உடல் தோற்றத்துடன் இருக்கிறீர்களா எதை சாப்பிட்டாலும் உடம்பு ஏறவில்லை என்று நினைக்கிறீர்களா கவலையை விடுங்கள் இதனை சுலபமாக இனி சரி செய்து விடலாம். உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களோ அல்லது  குழந்தைகளோ மிகவும் ஒல்லியாகவும் மெல்லிய உடல் தோற்றத்துடன் இருக்கிறார்கள் என்றால் இதனை கட்டாயம் கொடுங்கள் இதன் மூலம் அவர்களின் உடல் எடை ஏறுவதை நீங்கள் கூடிய விரைவில் பார்க்கலாம்.

உடல் எடை மிகவும் குறைவாக உள்ளது என்று நினைப்பவர்கள் கட்டாயம் இதனை நீங்கள் சாப்பிட்டால் போதும் இது நீங்கள் அன்றாடம் உங்கள் உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டிய ஒன்றுதான்.இதனை நீங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலே போதும் உங்கள் உடல் எடை முன்னேற்றம் அடைவதை காணலாம்.

தேவையான பொருட்கள்

பாதாம் பிசின்

பால்

கருப்பட்டி

செய்முறை

1: முதலில் பாதாம் பிசின் எடுத்து சுத்தமாக இரண்டு முறை தண்ணீரில் கழுவிக் கொள்ள வேண்டும். பின்னர் இதனை ஒரு இரவு முழுவதும் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி ஊற வைக்க வேண்டும்.

2: மறுநாள் காலையில் இது ஒரு ஜெல்லி போன்று ஒரு மாறி இருக்கும். இதனை நீங்கள் நபர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப எடுத்துக் கொள்ள வேண்டும்.

3: பின்னர் ஒரு கிளாஸ் தண்ணீர் கலக்காத பசும்பாலை எடுத்துக்கொள்ள வேண்டும்.

4: அது நன்கு கொதித்த பின்பு அதில் இந்த ஜெல்லியை சேர்த்துக் கொள்ளவும்.

5: இத்துடன் ஒன்று அல்லது இரண்டு ஸ்பூன் கருப்பட்டியை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இதனை நீங்கள் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும் இதனை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் குடிக்கலாம்.

இவற்றின் மூலம் உங்களது ஹீமோகுளோபின் அளவு அதிகமாகும்.இதனை நீங்கள் வாரத்தில் மூன்று நாட்கள் குடித்து வந்தாலே உங்களது உடல் எடை அதிகரிக்கும்.