P.U சின்னப்பாவின் முதல் கதாபாத்திரம் இதுவா? ஓடிவந்த P.U சின்னப்பா!

0
214
#image_title

பியூ சின்னப்பா ஒரு மாபெரும் நாடக கலைஞர் அவரது அப்பா நாடக கலைஞர் என்பதால் அவரும் நாடகம் மற்றும் இசையின் மீது ஆர்வத்தை செலுத்தி படிக்காமல் நாடகத்தின் மீது ஆர்வம் கொண்டு நாடகத்தையே நம்பி அதன் பிறகு திரைப்பட வாழ்வில் தனது நல்ல நடிப்பை மக்களுக்கு தந்தார்.

 

சந்த சரப வண்ணக் களஞ்சியம்’ என்று புகழப்பட்ட ராஜபார்ட் பி.எஸ்.உலகநாத பிள்ளையின் ஒரே புதல்வனாகப் பிறந்தவர் தான் பி.யு.சின்னப்பா, பஜனை கோஷ்டிகளில் பாடுவது வழக்கமாம். இவரது பஜனை பார்ப்பதற்கு தான் மக்கள் கூட்டம் கூடுமாம், அந்த அளவிற்கு அவர் பஜனையில் வெகு பிரபலம்.

 

 

பியூ சின்னப்பாவின் முதல் கதாபாத்திரம் என்னவென்று தெரியுமா?

 

அப்பொழுது சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகத்தில் சேர்ந்து இசை பாட்டு என பாடி நன்கு நடிக்க கூடியவருக்கு அந்த கம்பெனியில் கொடுக்கப்பட்ட முதல் வேடம் மாயசீதை

 

போர்க்களத்தில் ராவணன் மகன் இந்திரஜித்தால் வெட்டுபட்டு சாகக்கூடிய மாய சீதை வேடம். அவருக்கு பாட்டும் இல்லை வசனமும் இல்லை . இங்கு இருந்தால் வேலைக்கு ஆகாது என்று அங்கிருந்து தப்பி மதுரை பாய்ஸ் கம்பெனியில் சேர்ந்தாராம் பி யு சின்னப்பா.

 

நல்ல நடிப்பன் திறனின் காரணமாக அந்த கம்பெனியின் ராஜபார்ட் ஆனார். அந்த கம்பெனியின் துருப்பு சீட்டு நாடகம் என்றால் கோவலன் நாடகம். தனது அழகான நடிப்பாலும் திறமையாலும் கோவலன் நாடகத்தின் ராஜபார்ட் ஆனாராம் பியூ சின்னப்பா.

 

இந்த நாடகத்தைப் பார்க்க அத்தனை கூட்டம் வருமாம்? சின்னப்பா மற்றும் காளி ஆகியோரின் நாடகம், அதில் விளம்பரங்கள் குழந்தைகள், இளகிய மனம் உடையவர்கள், கர்ப்பம் உடையோர் வரவேண்டாம் என்று கூட விளம்பரம் செய்வார்களாம்.

 

நாடகத்தில் நடித்து பல பெயர்களை வாங்கி அதன் பின் திரைப்படத்தில் சந்திரகாந்தா என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் பியு சின்னப்பா. உத்தமபுத்திரன் இரட்டை வேடங்களில் முதன் முதலில் நடித்த பட்டம் இவரையே சேரும். மாபெரும் வெற்றி பெற்றது மார்டன் தேட்டர்ஸ் மூலம் தயாரித்த இந்த படம் மாபெரும் வெற்றியை பெற்றது.

 

 

author avatar
Kowsalya