திமுகவில் திடீர் ட்விஸ்ட்.. அட விவகாரம் இப்படி போகுதா..!!

0
180
#image_title

திமுகவில் திடீர் ட்விஸ்ட்.. அட விவகாரம் இப்படி போகுதா..!!

கடந்த சில மாதங்களாகவே திமுகவிற்கு இடி மேல் இடியாக வந்து விழுந்து கொண்டிருக்கிறது. ஊழல், பண மோசடி என்று ஒவ்வொரு அமைச்சராக சிறை செல்ல தயாராகி கொண்டிருக்கின்றனர். கடந்த கால ஆட்சியில் திமுக செய்த ஊழல்கள் தற்பொழுது ஒவ்வொன்றாக நீதிமன்றம் மூலம் எட்டி பார்க்கத் தொடங்கி இருக்கிறது.

கடந்த ஜூன் மாதம் பண மோசடி வழக்கில் செந்தில் பாலாஜி அவர்கள் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைபட்டு இருக்கும் நிலையில் அடுத்து சொத்து குவிப்பு வழக்கில் உயர் கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்து வந்த பொன்முடி அவர்கள் உயர் நீதிமன்றத்தால் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறார். தற்பொழுது சிறைத்தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தாலும் எம்.எல்.ஏ பதவியை அவர் இழந்து இருக்கிறார்.

மேலும் மணல் கொள்ளை வழக்கில் துரை முருகன் அவர்கள் அடுத்து சிறை செல்வது உறுதி என்று அரசியல் வட்டாரத்தில் பேச்சு அடிபட்டு வருகிறது. இவர்களை தவிர்த்து இன்னும் 9 அமைச்சர்கள் மீதான ஊழல், பண மோசடி வழக்கு அடுத்தடுத்து விசாரணைக்கு வர இருக்கிறது.

திமுகவின் நிலை தற்பொழுது கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணி வெடி என்பது போல் இருக்கிறது. இந்நிலையில் திமுகவிற்கு அதிர்ச்சி அளிக்கும் விஷயம் ஒன்று மெல்ல மெல்ல நடந்து வருகிறது. அதாவது கோவையில் பொறுப்பு அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அவர்கள் தற்பொழுது சிறையில் இருப்பதால் அவரது சொந்த தொகுதியில் உள்ள முக்கிய நிர்வாகிகள், பிரமுகர்கள் ஒவ்வொருவராக அதிமுகவில் இணைந்து வருகின்றனர். இதனால் இந்த முறை நாடாளுமன்ற தேர்தலில் செந்தில் பாலாஜியின் சொந்த தொகுதியில் திமுக வெற்றி பெறுவது பெரும் சவாலாக இருக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே கோவை மாவட்டம் அதிமுக கோட்டையாக இருக்கும் நிலையில் இனி திமுகவால் அங்கு வால் ஆட்ட முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது.