கலைஞரின் மகன் முக முத்து! நடித்த படம்! MGR DMK விட்டு பிரிவதற்கு காரணம் இதுவா?

0
238
#image_title

கலைஞருக்கு மு க அழகிரி முக ஸ்டாலின் கனிமொழி இருப்பது மட்டும்தான் தெரியும். ஆனால் மு க முத்து என்பவர் கலைஞரின் முதல் மனைவியின் மகன்.

 

இது எம்ஜிஆர் திமுகவில் இருந்த நேரம் அது. திமுகவில் எம்ஜிஆர் பலம் கொண்டு எம்ஜிஆர் இன் திறமை மற்றும் நடிப்பாலும் மக்கள் செல்வாக்காலும் திமுக வெற்றி பெற்றது.

 

இப்பொழுது அண்ணா இறக்கிறார். இறந்த பொழுது யாரை முதலமைச்சர் ஆக்க வேண்டும் என்று எண்ணிய பொழுது, நெடுஞ்செழியன் தான் வருவேன் என்று நினைத்துக் கொண்டிருந்த நேரம் அது. அப்பொழுது எம்.ஜி.ஆரின் அரசியலும் மக்கள் செல்வாக்கும் இருந்ததால் எம்ஜிஆர் யாருக்கு ஆதரவு தருகிறாரோ? அவர்தான் முதலமைச்சர் என்று பேசப்படும் நேரம் அது.

 

எம்ஜிஆர் கலைஞரும் மிகவும் நண்பர்கள் திரைப்படத் துறையிலிருந்து இருவர்களுக்கும் நட்பு இருந்த பொழுது எம்ஜிஆர் கலைஞரை சொல்லுகிறார் கலைஞர் முதலமைச்சராக ஆகிறார்.

 

அப்பொழுது எம்ஜிஆர் திமுக கட்சியின் பொருளாளர் ஆகிறார். .

இந்த சமயத்தில் கருணாநிதி அவர்களே அஞ்சுகம் என்ற பெயரில் ஒரு தயாரிப்பு நிறுவனம் உருவாக்கி, தானே தயாரித்து கருணாநிதியின் ,பத்மாவதி அவர்களின் மகனான மு க முத்து அவர்களை வைத்து படம் ஒன்று தயாரிக்கிறார்.

 

அந்த படத்தின் பெயர் பிள்ளையோ பிள்ளை லட்சுமி அவர்கள் ஹீரோயினாக நடிக்கிறார்கள். முரசொலி மாறன் வசனம் எழுதுகிறார்.மறைமுகமாக கலைஞரும் வசனம் எழுதினார் என்று சொல்லப்படுகிறது.கிருஷ்ணன் பஞ்சு அவர்களின் இயக்கத்தில் எம்எஸ் விஸ்வநாதன் அவர்களின் இசையமைப்பில் இந்த படம் வெளியாகியது.

 

இந்த படத்தில் மு க முத்து அவர்களுக்கு அப்படியே எம்ஜிஆர் அனைத்து விதமான கேரக்டர்களும் பொருந்தும் படி எம்ஜிஆரின் பாணியில் அந்த திரைப்படம் உருவாகிறது. எம்ஜிஆர் எப்படி மக்களை நேசிப்பாரோ மக்களுடன் மக்களாக வாழ்ந்து அவர்களுக்கு உதவி செய்வாரோ, அதில் பாணியில் அந்த படம் அமைந்திருந்தது. அவர் உடுத்தும் உடையை போலவே மு க முத்து விற்கும் உடை, அவரது ஹேர் ஸ்டைல் போலவே மு.க முத்துவருக்கும் ஹேர் ஸ்டைல், வாட்ச் காட்டும் ஸ்டைல் அனைத்தும் எம்ஜிஆரின் வானிலையே இருந்தது. அதனால் அந்தப் படம் வெளியாகி 100 நாள் கடந்து ஓடியது. அதனால் முக முத்துவிற்கு நிறைய படங்கள் புக் ஆயின. அவருக்கு ரசிகர் மன்றங்களும் அதிகமாக வந்தது.

 

அப்பொழுது எம்ஜிஆருக்கு பல்லாயிரக்கணக்கான ரசிகர் மன்றங்கள் இருந்தது. அந்த ரசிகர் மன்றங்கள் கொஞ்சம் முக முத்து அவரின் ரசிகர் மன்றங்களாக மாறியது, என எம்ஜிஆருக்கு ஒரு செய்தியாக வந்துள்ளது.

 

முதலில் நம்பாத எம்ஜிஆர் அதன் பிறகு அவரே நேரில் பேசி ஆமாம் என்று உறுதியான பிறகு, இது ஏதோ ஒரு சதி நடக்கிறது என்று எம்ஜிஆர் புரிந்து கொள்கிறார்.

 

மு.க.முத்துவிடம் ‘நீ உனக்கென ஒரு தனி பாணியை ஃபாலோ பண்ணு’ என சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.

 

அந்த படத்தில் பாடல் எழுதிய வாலி ஒரு பாடலில் ‘மூன்று தமிழ் தோன்றியது உன்னிடமோ.. நீ மூவேந்தர் வழிவந்த மன்னவனோ’ என எழுதியிருந்தார். இதைப்பார்த்த எம்.ஜி.ஆர் மறுநாள் வாலியை நேரில் அழைத்து ‘என்ன வாலி மூன்று தமிழ் தோன்றியது முத்துவிடமா?’ எனக் கேட்க வாலிக்கு புரிந்துவிட்டது.

 

அண்ணே.. முத்து வளர வேண்டிய பையன். வாழ்த்தி பாடுங்கன்னு கலைஞர் சொன்னார். என்னுடைய தமிழ் எல்லோரையும் வாழவைக்கணும்னு நீங்களே பலதடவ சொல்லி இருக்கீங்க.. அதனாலதான் அப்படி எழுதினேன்’ என எம்ஜிஆரிடம் வாலி சொல்லி இருக்கிறார்.

 

இதை மனதில் வைத்திருந்த எம்ஜிஆர் மதுரையில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் வராமல் இருந்து, சரியாக கலைஞர் பேசும் நேரத்தில் அந்த பொதுக்கூட்டத்திற்கு வந்து, அனைத்து எம்எல்ஏக்கள் இடமும் நான் இந்த கட்சியின் பொருளாளர், இதற்கு முன் உங்களுக்கு எவ்வளவு சொத்து இருந்தது இப்பொழுது எவ்வளவு சொத்து இருக்கிறது என்று எனக்கு நாளை காலை வேண்டுமென்று அவர் அந்த பொதுக்கூட்டத்தில் பேசவே அது மாபெரும் பிரச்சனையாக வெளிவந்திருக்கிறது.

 

இதன்பின் நெடுஞ்செழியன் அவர்கள் கலைஞரிடம் எம்ஜிஆர் திமுகவில் இருந்து வெளியேற்ற சொன்னதனால், கலைஞரும் எம்ஜிஆரை வெளியேற்றிய பின் எம்ஜிஆர் தனி கட்சி துவங்கினார் என்று வரலாறு உண்டு .

author avatar
Kowsalya