இளம் வயதில் தலை சொட்டை விழுந்துவிட்டதா? இதை தலைக்கு தேய்த்து குளித்தால் காடுமாதிரி முடி வளரும்!!

Photo of author

By Divya

இளம் வயதில் தலை சொட்டை விழுந்துவிட்டதா? இதை தலைக்கு தேய்த்து குளித்தால் காடுமாதிரி முடி வளரும்!!

Divya

தற்பொழுது இளம் வயதினருக்குதான் தலைமுடி உதிர்வு அதிகமாக இருக்கிறது.இளம் வயதில் தலை வழுக்கையாகி விட்டால் சீக்கிரம் முதுமை தோற்றம் வந்துவிடும்.எனவே தலை முடி உதிர்வை முழுமையாக கட்டுப்படுத்த இந்த பயனுள்ள குறிப்பை பின்பற்றுங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)கடுக்காய் பொடி
2)தேங்காய் பால்
3)முட்டையின் வெள்ளைக்கரு
4)கற்றாழை ஜெல்

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு கற்றாழை மடலை தோல் நீக்கி கொள்ள வேண்டும்.அடுத்து கற்றாழை ஜெல்லை மட்டும் தனியாக பிரித்து பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி அலசி எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் இதை மிக்சர் ஜாரில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் ஒரு முட்டையின் வெள்ளைக்கருவை அதில் ஊற்றி மீண்டும் அரைக்க வேண்டும்.

அதன் பிறகு ஒரு மூடி தேங்காயை துருவி மிக்சர் ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்து பால் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்த தேங்காய் பாலை கிண்ணத்திற்கு வடிகட்டி அரைத்த கற்றாழை ஜெல்லை அதில் ஊற்றி மிக்ஸ் செய்ய வேண்டும்.பின்னர் ஒரு தேக்கரண்டி அளவு கடுக்காய் பொடியை அதில் கொட்டி மிக்ஸ் செய்ய வேண்டும்.இதை தலைக்கு தடவி நன்றாக மசாஜ் செய்து ஒரு மணி நேரம் வரை ஊறவைக்க வேண்டும்.

அதன் பிறகு மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலையை அலசி சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.இப்படி செய்தால் தலை முடி வளர்ச்சி அதிகரிக்கும்.தலையில் வழுக்கையான பகுதியில் புதிதாக முடி வளரத் தொடங்கும்.

தேவையான பொருட்கள்:-

1)தேங்காய் துருவல்
2)கற்றாழை பேஸ்ட்
3)வெந்தயம்

செய்முறை விளக்கம்:-

ஒரு கப் அளவிற்கு தேங்காய் துருவி வைத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் இதை அரைத்து பால் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு கற்றாழை ஜெல்லை தனியாக பிரித்து பேஸ்டாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.இதற்கு முன்னர் இரண்டு தேக்கரண்டி அளவு ஊறவைத்த வெந்தயத்தை மிக்சர் ஜாரில் போட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைக்க வேண்டும்.

இப்பொழுது தேங்காய் பாலில் கற்றாழை பேஸ்ட்,வெந்தய பேஸ்ட் ஆகியவற்றை போட்டு மிக்ஸ் செய்ய வேண்டும்.இதை தலைக்கு தடவி குளித்து வந்தால் நன்றாக முடி வளரும்.