தவறான நம்பருக்கு G pay phonepay பண்ணிட்டீங்களா? இதை செய்து பணத்தை திரும்ப பெறுங்கள்!!

0
156

தவறான நம்பருக்கு G pay phonepay பண்ணிட்டீங்களா? இதை செய்து பணத்தை திரும்ப பெறுங்கள்!!

தற்போது உலகம் முழுவதுமே டிஜிட்டல் முறையில் வாழ்ந்து கொண்டிருக்கிறது. இப்போது இருக்கின்ற காலகட்டத்தில் எங்கு சென்றாலும் பணத்தை எடுத்துச் செல்லாமல் மொபைல் போனில் உள்ள பணப்பரிமாற்ற செயலிகளின் மூலம் பகிர்ந்து வருகிறார்கள். அதாவது ஜி பே, போன் பே, பே டி எம் என்ற செயலிகளின் மூலமாக தற்போது அனைவரும் பணப்பரிமாற்றம் செய்து வருகிறார்கள். இவ்வாறு பணப்பரிமாற்றம் செய்யும்போது தவறாக யாருக்கேனும் பணத்தை அனுப்பி விட்டால் என்ன செய்வது என்று பயப்படுவீர்கள்.

எனவே யாருக்காவது தெரியாமல் பணத்தை மாற்றி அனுப்பி விட்டால் திரும்ப அந்த பணத்தை எவ்வாறு பெற்றுக் கொள்வது என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.

இப்போது நீங்கள் ஜிப்பை ஃபோனில் பேடிஎம் மூலமாக யாருக்காவது தவறான நம்பருக்கு பணத்தை அனுப்பி விட்டால் பயப்படாமல் நிதானமாக இதை செய்யவும். இதற்கு முதலில் 18001201740 என்ற எண்ணிற்கு அழைத்து அதில் உங்கள் புகாரை முதலில் பதிவிட வேண்டும்.

இவ்வாறு நாம் புகார் அளித்த 5 லிருந்து 7 நாட்களுக்குள் நம் பணம் திரும்ப நமக்கே வங்கியில் வந்துவிடும். ஒருவேளை பணம் திரும்ப வரவில்லை என்றால் bit.ly/Rbiccp என்ற இணையதளத்திற்கு சென்று உங்கள் புகாரை அதில் ரெஜிஸ்டர் செய்ய வேண்டும். இவ்வாறு செய்த பின்னர் அவர்கள் சம்மந்தப்பட்ட வங்கியின் மீது நடவடிக்கை மேற்கொண்டு உங்களது பணத்தை திரும்ப பெற்று தருவார்கள்.

எனவே பணத்தை தவறாக அனுப்பி விட்டால் பயப்படாமல் இவ்வாறு செய்யுங்கள். உடனடியாக பணம் திரும்ப கிடைக்கும்.

Previous articleஇதோ அட்டகாசமான அரசு வேலை வந்துவிட்டது!! ஐஐடி மெட்ராஸ் நிறுவனம் மிஸ் பண்ணிடாதீங்கள்!!
Next articleICICI Bank ல் அசத்தலான வேலைவாய்ப்பு!! விண்ணப்பிக்க விரையுங்கள்!!