ஐப்பசி மாதம் வருகின்ற 6 நாள் சஷ்டி விரதம் இந்து மக்களுக்கு முக்கியமான ஒன்றாகும்.முருகனை வணங்கும் பக்தர்கள் இந்த ஆறு நாள் விரதத்தை கடைபிடித்து முருகன் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்வது வழக்கம்.
இந்த கந்த சஷ்டி விரதம் கடந்த நவம்பர் 7 வியாழன் அன்று நிறைவு பெற்றது.இந்த கந்த சஷ்டி விரதம் தீபாவளி முடிந்து அடுத்து வரும் ஆறு நாட்கள் கடைபிடிக்கப்படுகிறது.இந்நாளில் விரதம் இருந்து முருகனை வழிபட்டால் கோடி நன்மைகள் கிடைக்கும்.ஆனால் சிலரால் எதிர்பாராத விதமாக விரதத்தை தவறவிட்டிருப்பார்கள்.சஷ்டி விரத நாளில் முருகனை வழிபட முடியாமல் போனவர்கள் கீழே சொல்லப்பட்டுள்ளபடி செய்தால் முருகனின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.
இதற்கு நீங்கள் ஒரு நல்ல நாளை தேர்ந்தெடுக்க வேண்டும்.முருகனுக்கு உகந்த செவ்வாய் கிழமையை தேர்நதெடுக்க வேண்டுமென்று அவசியமில்லை.நீங்கள் எந்த நாளில் சஷ்டி விரதம் கடைபிடிக்க இருக்கிறீர்களோ அந்நாளில் உங்கள் வீட்டு பூஜையறையில் ஒரு மனப்பலகையை போட்டு வைக்க வேண்டும்.அதில் அரிசியை கொண்டு அறுங்கோண சக்கரம் அதாவது ஸ்டார் கோலம் வரைய வேண்டும்.
பிறகு அதன் நடுவே சரவணபவ என்று எழுத வேண்டும்.அடுத்து ஸ்டார் கோலத்தின் 6 முனைகளிலும் ஆறு ,மண் விளக்குகள் வைத்து நெய் தீபம் ஏற்ற வேண்டும்.கோலத்தின் நடுவே ஒரு அகல் விளக்கில் தீபம் ஏற்ற வேண்டும்.
பிறகு முருகனின் திருவுருவ படத்திற்கு அலங்காரம் அபிஷேகம் செய்து வழிபட வேண்டும்.இப்படி தொடர்ந்து 9 அல்லது 11 நாட்கள் வழிபாடு செய்ய வேண்டும்.இதை சூரிய உதயத்திற்கு முன்பே செய்ய வேண்டும் என்பதை மறந்து விடாதீர்கள்.இந்நாட்களில் முருகனுக்கு உகந்த நெய் வேதியங்களை படைக்கலாம்.கந்த சஷ்டி விரதத்தை தவறவிட்டவர்கள் இந்த வழிபாடு செய்தால் முருகனின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.