கூகுள் பே மூலம் வேறொருவர் கணக்கிற்கு தவறாக பணம் அனுப்பிட்டீங்களா? இதை செய்து உடனே மீட்டுவிடுங்கள்!

Photo of author

By Divya

இந்தியாவில் கடந்த 2016 ஆம் ஆண்டு யுபிஐ பணப்பரிவர்த்தனை சிஸ்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.இதன் மூலம் பயனர்கள் மொபைலில் இருந்து எங்கிருந்தும் டிஜிட்டல் முறையில் பணப் பரிவர்த்தனை செய்து கொள்ள முடியும்.இந்தியாவில் சுமார் 550க்கும் அதிகமான வங்கிகளின் வாடிக்கையாளர்கள் UPI பயனர்களாக உள்ளனர்.

பெரும்பாலான ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் பயனர்கள் UPI மூலம் அதிக பலனடைந்து வருகின்றனர்.இந்தியாவில் ஒவ்வொரு நொடிக்கு ஒருமுறை லட்சக்கணக்கான பரிவர்த்தனைகள் நிகழ்கிறது.

UPI செயலிகள்

இந்தியாவில் போன் பே,கூகுள் பே,அமேசான் பே,பேடிஎம் உள்ளிட்ட UPI செயலிகள் மூலம் பயனர்கள் எளிதில் பரிவர்த்தனை மேற்கொண்டு வருகின்றனர்.குறிப்பாக கூகுள் பே,போன் பே செயலிகளை அதிக பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.UPI செயலிகள் மூலம் பணம் அனுப்புவது எளிது என்றாலும் கவனம் சிதறினால் பணம் இழக்க நேரிடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

ஆனால் நீங்கள் ஒருவருக்கு தவறுதலாக பணம் அனுப்பி விட்டால் அதை சில வழிகள் மூலம் எளிதில் மீட்டுவிட முடியும்.

கூகுள் பேவில் நீங்கள் ஒருவருக்கு தவறுதலாக பணம் அனுப்பிவிட்டீர்கள் என்றால் அதை எப்படி மீட்பது என்பது குறித்து அறிந்து கொள்ளுங்கள்.

நீங்கள் தவறுதலாக அனுப்பிய பணத்தை 48 மணி நேரத்திற்குள் பெற முடியும்.நீங்கள் தவறுதலாக பணம் அனுப்பிய நபரும் நீங்களும் ஒரே வங்கியாக இருந்தால் சுலபமாக பணத்தை மீட்டுவிடலாம்.

நீங்கள் தவறுதலாக பணம் அனுப்பிவிட்டதை உணர்ந்தால் உடனடியாக வங்கி வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.நீங்கள் தவறுதலாக அனுப்பிய பணத்தை திரும்ப பெற டிரான்ஸாக்ஷன் ரி-கால் என்ற அம்சத்தை வங்கிகள் வழங்குகின்றன.அதேபோல் RBI-இன் NPCI portal இணையதளத்தில் புகார் அளித்தால் சில மணி நேரத்தில் பணத்தை திரும்ப பெற்றுவிடலாம்.