குழம்பில் உப்பு அதிகமாக போட்டுட்டீங்களா? அப்போ இதை செய்து உப்பு கரிப்பை சரி செய்யுங்கள்!!

Photo of author

By Divya

எந்த ஒரு உணவாக இருந்தாலும் உப்பு சேர்த்தால் மட்டுமே சுவையாக இருக்கும்.உணவின் ருசிக்கு சரியான அளவில் உப்பு சேர்க்க வேண்டியது மிக முக்கியம்.ஆனால் இன்று பலருக்கு உணவில் எவ்வளவு உப்பு சேர்க்க வேண்டுமென்ற அளவு தெரியாமல் இருக்கிறது.சில சமயம் குறைவான உப்பு சேர்த்து விடுவீர்கள்.சில சமயம் வாயில் வைக்க முடியாத அளவிற்கு உணவில் உப்பு கரிப்பு இருக்கும்.

உப்பு குறைவாக இருந்தால் கூட சேர்த்துக் கொள்ளலாம்.ஆனால் உப்பு அதிகமாகிவிட்டால் உணவின் சுவையே மாறிவிடும்.உணவில் அளவிற்கு அதிகமாக உப்பு இருந்தால் யாரும் சாப்பிட விரும்ப மாட்டார்கள்.

சர்க்கரை நோய்,இரத்தம் சம்மந்தப்பட்ட பாதிப்பு,உடல் பருமன் போன்ற பிரச்சனையை சந்தித்து வருபவர்கள் அதிக உப்பு சேர்த்த உணவுகளை சாப்பிட்டால் கடுமையான பக்கவிளைவுகளை சந்திக்க நேரிடும்.எனவே உணவில் சேர்க்கப்பட்ட கூடுதல் உப்பை சரி செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸை பின்பற்றுங்கள்.

டிப் 01:

ஒரு பச்சை உருளைக்கிழங்கை தோல் சீவிவிட்டு சிறு துண்டுகளாக நறுக்கி உப்பு அதிகம் உள்ள குழம்பில் போட்டால் உப்பு கரிப்பு குறையும்.

டிப் 02:

எலுமிச்சம் பழத்தை நறுக்கி அதன் சாற்றை உப்பு அதிகம் சேர்க்கப்பட்ட உணவில் பிழிந்துவிடவும்.இப்படி செய்தால் உப்பு சுவை குறையும்.

டிப் 03:

உப்பு சுவை அதிகமான உணவில் தயிர் அல்லது தேங்காய் பால் சேர்த்தால் கரிப்பு குறையும்.

டிப் 04:

பொரியல்,வறுவலில் உப்பு அதிகமானால் தேங்காயை துருவி சேர்த்து கரிப்பை கட்டுப்படுத்தலாம்.

டிப் 05:

உப்பு அதிகமான குழம்பில் தண்ணீர் மற்றும் காரம் சேர்த்து கரிப்பை குறைக்கலாம்.