1953 ஆம் ஆண்டு முதல் 2003 ஆம் ஆண்டு வரை தமிழ் திரையுலகில் இருந்த பழம் பெறும் நடிகையாக அறியப்படுபவர் விஜயகுமாரி. இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்களாக குமுதம் , சாரதா , குங்குமம் , நானும் ஒரு பெண் சாந்தி , ஆனந்தி , அவன் பித்தன் , அல்லி , தேடி வந்த திருமகள் , பச்சை விளக்கு , பார் மகளே பார் , காக்கும் கரங்கள் , போலீஸ்காரன்மணி , மற்றும் பெண்மணிகள் போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.
மு கருணாநிதி அவர்கள் எழுதிய கதையான பூம்புகார் படத்தில் கண்ணகியாக நடித்ததன் மூலம் மிகப்பெரிய பேரு பெற்ற நடிகையாக இவர் விளங்குகிறார். கண்ணகி என்று கூறினாலே இப்பொழுது பெரும்பான்மையானவருக்கு நினைவு வருவது இவருடைய முகமாகத்தான் இருக்கும். மிகப்பெரிய வசனத்தை கூட சாதாரணமாக தன்னுடைய நடிப்பில் உண்மையான கண்ணுக்கு ஆகவே மாறி நடிப்பதில் இவர் வல்லவராக காட்சியளிக்கிறார்.
இப்படிப்பட்ட இவர் சமீபத்திய பேட்டி ஒன்று பேசி இருப்பதாவது :-
50 வருடங்களாக தான் சாப்பாடு என்பதை சாப்பிடவே இல்லை என்றும் அதற்கு பதிலாக காலையில் 2 வேக வைத்த முட்டைகளை சாப்பிடுவதாகவும் அதன் பின் தனியா, சீரகம், மிளகு மற்றும் ஜவ்வரிசியை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து முதல் நாளே எடுத்து வைத்துக் கொள்வதாகவும் அடுத்த நாள் முழுவதும் அந்த நீரை மட்டுமே பருகுவதாகவும் தெரிவித்திருக்கிறார்.
மேலும் மதியத்திற்கு ஒரு இட்லி மீன் குழம்பு அல்லது காய்கறிகள் நிறைந்த குழம்பை எடுத்துக் கொள்வதாகவும் இரவிற்கு ஒரு தோசை அல்லது ஒரு இட்லியை எடுத்துக் கொள்வதாகவும் தெரிவித்திருக்கிறார். மாலை நேரத்தில் ஒரு டீ மற்றும் இரண்டு பிஸ்கட் காலை எடுத்துக் கொள்வதாகவும் தன்னுடைய கடந்த 50 ஆண்டு வாழ்க்கையில் சாப்பாடு என்பதை சாப்பிடவே இல்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.