என்னுடைய காருக்கே வழிவிட வில்லையா? கோபத்தில் மாவட்ட ஆட்சியர் பிறபித்த உத்தரவு!

0
222
Didn't give way to my car? An order issued by the District Collector in anger!
Didn't give way to my car? An order issued by the District Collector in anger!

என்னுடைய காருக்கே வழிவிட வில்லையா? கோபத்தில் மாவட்ட ஆட்சியர் பிறபித்த உத்தரவு!

தெலுங்கானா மாநிலம் முலுகு மாவட்டத்தை சேர்ந்தவர் யாக்கையா.இவர் விவசாயம் செய்து வருகின்றார்.மேலும் இவர் எருமை மாடுகளை வளர்த்து வருகின்றார் .அதனை மேய்ச்சலுக்காக வனப்பகுதிக்கு ஓட்டி சென்றுளார்.அப்போது இவருடைய மாடுகள் சாலையை கடந்துள்ளது  அந்த வழியாக முலுகு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணா ஆதித்யா காரில் வந்துள்ளார்.அப்போது சாலையில் மாடுகள் சென்று கொன்றுந்ததால் மாவட்ட ஆட்சியரின் கார் ஓட்டுனர் பலமுறை ஹாரன் அடித்துள்ளார். ஆனால் விவசாயி வழிவிடவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.அந்நிலையில் விவசாயான யாக்கையா செல்போனில் பேசிக்கொண்டு கார் வருவதை கவனிக்காமல் நடுரோட்டில் அலட்சியமாக சென்றாதாக கூறப்படுகின்றது.

அதனால் மாவட்ட ஆட்சியர் யாக்கையா மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.அந்த வகையில் அரசின் ஹரித்த ஹராம் திட்டத்தின் கீழ் நடப்பட்ட மரக்கன்றுகளை விவசாயின் மாடுகள் மேய்த்து விட்டதாக கூறி 7500 ரூபாய் அபராதம் விதிக்கபட்டது.இந்த அபராத தொகையை செலுத்தவில்லை என்றால் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.அதன் பிறகு விவசாயி யாக்கையா அவர்கள் விதித்த அபராத தொகையை செலுத்தியுள்ளார்.

மேலும் மாவட்ட ஆட்சியரின் இந்த நடவடிக்கைக்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியரின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தாலுகா அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் அதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகின்றது.முன்னதாக தமிழகத்தில் சாலைகளில் மாடுகள் சுற்றி திரிந்தால் அபராதம் விதிக்கப்படும் என கூறியிருப்பது குறிப்பித்தக்கது.

Previous articleஅரசியல் பதிவுகளுக்கு ட்விட்டரில் லைக்! கிளம்பியது புது சர்ச்சை!
Next articleவாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள் ? அப்போ இந்த 9 விஷயத்தை நீங்க கவனிக்க மறந்துடாதீங்க !