விளையாட்டாக செய்தது தப்புன்னு தெரியாது!!! வீடியோ வெளியிட்டு மன்னிப்பு கேட்ட கூல் சுரேஷ்!!!

0
86
#image_title

விளையாட்டாக செய்தது தப்புன்னு தெரியாது!!! வீடியோ வெளியிட்டு மன்னிப்பு கேட்ட கூல் சுரேஷ்!!!

சமீபத்தில் நடைபெற்ற இசை வெளியீட்டு விழா ஒன்றில் பெண் தொகுப்பாளர் ஒருவரிடம் எல்லை மீறி நடந்து கொண்டதற்காக நடிகர் கூல் சுரேஷ் அவர்கள் வீடியோ வெளியிட்டு மன்னிப்பு கேட்டுள்ளார்.

நடிகர் மன்சூர் அலிகான் அவர்கள் நடிப்பில் சரக்கு சரக்கு திரைப்படம் உருவாகி உள்ளது. இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அப்பொழுது மேடையில் நடிகர் கூல் சுரேஷ் அவர்கள் பெண் தொகுப்பளரிடம் எல்லை மீறி நடந்து கொண்டார்.

நடிகர் கூல் சுரேஷ் அவர்களின் செயல் அங்கு வந்த பத்திரிக்கையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதாவது மேடையில் நின்று கொண்டிருந்த பெண் தொகுப்பாளருக்கு திடீரென்று மாலை அணிவித்தார். கூல் சுரேஷ் அவர்களின் இந்த செயலுக்கு இசை வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்திருந்த பத்திரிக்கையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து நடிகர் மன்சூர் அலிகான் அவர்கள் பெண் தொகுப்பாளரிடம் நடிகர் கூல் சுரேஷ் அவர்களை மன்னிப்பு கேட்க செய்தார்.

இதையடுத்து இந்த செயலை நான் விளையாட்டாகத்தான் செய்தேன். அதற்காக நான் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக் கொள்கின்றேன் என்று கூறி ஒரு வீடியோ ஒன்றை சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நடிகர் கூல் சுரேஷ் அவர்கள் வெளியிட்ட வீடியோவில் “நான் விளையாட்டாகத் தான் அந்த பெண்ணுக்கு மாலை அணிவித்தேன். அந்த பெண்ணின் பெயர் கூட எனக்கு தெரியாது. அவருக்கு மாலை அணிவித்த பிறகுதான் மாலை படக் கூடாது என்பது தெரிய வந்தது. நான் செய்த செயலுக்காக என்னை மன்னித்து விடுங்கள்” என்று அந்த வீடியோவில் அவர் தெரிவித்துள்ளார்.