இவரையும் விட்டு வைக்கவில்லையா? சவுண்டு சர்வீஸ் செய்பவரிடம் 4லட்சம் மோசடி செய்த திமுக எம்எல்ஏ!

Photo of author

By Rupa

இவரையும் விட்டு வைக்கவில்லையா? சவுண்டு சர்வீஸ் செய்பவரிடம் 4லட்சம் மோசடி செய்த திமுக எம்எல்ஏ!

Rupa

இவரையும் விட்டு வைக்கவில்லையா? சவுண்டு சர்வீஸ் செய்பவரிடம் 4லட்சம் மோசடி செய்த திமுக எம்எல்ஏ!

திமுக என்று கூறினாலே லஞ்சம்,ஊழல் தான் முதலில் நினைவுக்கு வரும்.தற்போது தேர்தலில் வெற்றி பெற்று நமது தமிழகத்தையே அவர்களிடம் அடமாணம் வைத்து விட்டோம். ஆட்சிக்கு வந்தவுடன் மக்களுக்கு நல்லது செய்வது போல புதிய திட்டங்களை அமல்படுத்தி விட்டு நாளடைவில் விலைவாசியை உயர்த்தி விட்டனர். பேருந்தில் பெண்களுக்கு இலவசம் என்று கூறி மறுபுறம் பெட்ரோல் டீசலின் விலையும் ஏறிவிட்டது.

 

பால் விலை குறைத்து மற்றொருபுறம் ஆவின் சம்பந்தமாக வரும் நெய் போன்ற பொருட்களின் விலையை அதிகரித்து விட்டனர்.இதுபோல நாளுக்கு நாள் மக்களின் முன் கண்துடைப்பு நாடகம் ஆடுகிறது திமுக.அதுமட்டுமின்றி வாரிசு அரசியலே செய்ய மாட்டோம் எனக்கூறி தற்போது அந்த கட்சியில் வாரிசு அரசியல் தான் நடக்கிறது.திமுக பெரிய பெரிய இடத்தில் தான் கை வைத்து லஞ்சம் ஊழல் என செய்துவருகிறது என்றால்,தற்போது அன்றாடம் வரும் வருமானத்தை வைத்து பிழைப்பை ஓட்டும் நபர்களையும் ஏமாற்றி வருகிறது.

 

எம்எல்ஏக்களுக்கான தேர்தல் கோலாகலமாக நடைபெற்றது.இதில் காதே கிழியும் படி கோஷமிட்டு தங்களின் ஓட்டுக்களை மக்களிடம் கேட்டு வந்தனர்.குறிப்பாக திமுக தங்களின் பிரச்சாரத்தின் போதெல்லாம் எங்களை வெற்றி பெற வைத்தால் உங்கள் தொகுதி குறைகளை கேட்டு உடனடியாக தீர்வு காண்பேன் என்று தான் கூறுகின்றனர்.

 

ஆனால் அவ்வாறு வாக்குறுதி கொடுத்த அவர்களால் பிரச்சாரத்தின் போது தான் உபயோகித்த சவுன்ட் சர்வீஸ் கான பணத்தையே தர முடியவில்லை.சென்னையில் தந்தையார் பேட்டையை சேர்ந்தவர் வேதாச்சலம். இவர் அவர் வசிக்கும் பகுதியில் சவுண்ட் சர்வீஸ் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவரிடம் ராயப்பன் தொகுதியில் போட்டியிட்ட ஐட்ரீம் மூர்த்தி மற்றும் ஆர் கே நகர் தொகுதியில் போட்டியிட்ட எபினேசர் என்பவர் பிரச்சாரத்திற்கு தேவைப்படும் பொருள்களை வாடகைக்கு எடுத்துள்ளனர்.

 

அந்தப் பட்டியலில் ராயப்பன் தொகுதியில் போட்டியிட்ட மற்றும் மூர்த்தி என்பவர் இரண்டு அரை லட்சம் ரூபாவையும் ஆர் கே நகர் தொகுதியில் போட்டியிட்ட கணேசன் என்பவர் ஒன்றரை லட்சம் ரூபாயும் கொடுக்காமல் தற்போது வரை இழுத்து வந்துள்ளார். தேர்தல் முடிந்து ஒரு வருட காலம் ஆகியும் தற்போது வரை இவருக்கு எந்த பணத்தையும் தரவில்லை. சவுண்ட் சர்வீஸ் வைத்திருப்பவர் குழம்பும் வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.