இறந்தவரின் ஆதார் கார்டு என்னவாகும் என்று தெரியுமா? இதை அவசியம் செய்ய வேண்டுமாம்!!

Photo of author

By Divya

இறந்தவரின் ஆதார் கார்டு என்னவாகும் என்று தெரியுமா? இதை அவசியம் செய்ய வேண்டுமாம்!!

ஆதார் ஒரு தனித்துவமான அடையாள அட்டை ஆகும்.நமது இந்திய அரசாங்கம் இந்த ஆதாரை ஒரு அடையாள ஆவணமாக வழங்கி வருகிறது.இதில் 12 இலக்க தனித்துவ எண்கள் உள்ளது.ஆதாரில் இருக்கின்ற கடைசி இலக்கமானது நமது நாட்டின் காசோலையில் இருக்கின்ற இலக்கமாகும்.

இன்றைய நடைமுறையில் ஆதார் இருந்தால் மட்டுமே அரசின் எந்தஒரு நலத் திட்டங்களை பெற முடியும் என்ற நிலை உருவாக்கி இருக்கிறது.வங்கி கணக்கு,வாக்காளர் அட்டை,பான் அட்டை என்று அனைத்திற்கும் ஆதார் எண் இணைப்பது அவசியமாகும்.

சிலிண்டர் மானியம் பெறுவதற்கு,அஞ்சல் திட்டங்களில் முதலீடு செய்வதற்கு,அரசின் நலத் திட்டங்களை பெறுவதற்கு கல்வி நிலையங்களில் ஊக்கத்தொகை பெறுவதற்கு என்று அனைத்து விஷயங்களுக்கும் முக்கிய ஆவணமாக உள்ளது.

இந்நிலையில் இறந்த ஒருவரின் ஆதார் அட்டையை என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.இறந்த ஒருவரின் ஆதார் அட்டையை பயோமெட்ரிக் மூலம் லாக் செய்ய வேண்டும்.இதனால் இறந்த நபரின் ஆதார் பயன்படுத்தி மோசடி செய்வது தடுக்கப்படும்.ஆதார் அட்டையை வழங்கும் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின்(UIDAI) அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்கு சென்று ஆதாரின் பயோமெட்ரிக் விவரங்களை லாக் செய்ய வேண்டும்.

அதேபோல் இறந்த ஒருவரின் பான் கார்டு விவரங்கள் பாதுகாப்பாக இருக்க வருமான வரித்துறையினரிடம் பான் கார்டை ஒப்படைக்க வேண்டும்.அதேபோல் இறந்த ஒருவரின் வாக்காளர் அட்டையை ரத்து செய்ய படிவம் எண் 7ஐ பூர்த்தி செய்து இறந்தவரின் இறப்புச் சான்றிதளை இணைத்து உள்ளாட்சி தேர்தல் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.