திக் திக் 105 நிமிடங்கள்!! ஹன்சிகா வீட்டுக்குள் நடந்தது என்ன!!

Photo of author

By CineDesk

திக் திக் 105 நிமிடங்கள்!! ஹன்சிகா வீட்டுக்குள் நடந்தது என்ன!!

ஹன்சிகா மோட்வானி இந்திய நடிகையும் முன்னாள் குழந்தை நடிகையும் ஆவார். இவர் முதலில் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் மட்டுமே தோன்றினார். பிறகு இவர் சில இந்தி மற்றும் கன்னடத் திரைப்படங்களிலும் நடித்து வந்தார். இவர் இந்தியாவிலுள்ள மங்களூரில் பிறந்தார். இவரின் தாய் மொழி சிந்தியாக இருந்தபோதும் தெலுங்கு மராத்தி, பெங்காலி, ஆங்கிலம், இந்தி, துளு, தமிழ் ஆகிய மொழிகளை சரளமாக பேசுவார். இதனால் இவர் தெலுங்கு கன்னடம் இந்தி போன்ற அனைத்து சிறந்து விளங்குகிறார்.

மேலும் இவர் இந்தி, தெலுங்கு கன்னடம், தமிழ் என பல மொழிகளிலும் இதுவரை 40 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இவர் நடிப்பு மற்றும் இவரின் அழகிய சிரிப்புக்கு என்று இவருக்கு பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. மேலும் இவர் ஹிந்தி சீரியல்களிலும் நடித்து வருகிறார். தமிழில் உருவான பார்த்திபன் ஒருவர் மட்டும் நடித்த ஒத்த செருப்பு சைஸ் 7 என்ற படத்தில் பார்த்திபனை மட்டும் மையமாக கொண்டு அதில் அவர் ஒருவர் மட்டுமே முழு திரைப்படத்திலும் நடித்திருப்பார்.

அதேபோல ஹன்சிகாவும் தற்போது தெலுங்கில் ஒரு படத்தில் கமிட்டாகி உள்ளார். அந்த படத்தை ராஜூ துசா இயக்குகிறார். சாம் சி. எஸ் இசை அமைக்கிறார். அந்த படத்தின் பெயர் 105 என்று கூறப்படுகிறது. இதை தொடர்ந்து இப்படம் திரில்லர் கதையில் தயாராகும் என கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் கதை ஒரே வீட்டிற்குள் நடக்கின்றார். அதில் ஹன்சிகா ஒருவர் மட்டுமே படம் முழுவதிலும் நடிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று தான் துவங்கியுள்ளது. இந்த தகவல் டுவிட்டரில் வெளிவந்துள்ளது. மேலும் ஹன்சிகா இப்படத்தில் நடிப்பது உற்சாகமாக இருப்பதாகவும் இப்படம் வெற்றி பெற வாழ்த்துவதாக தெரிவித்துள்ளார்.