பல வருடங்களாக தங்கம் இந்திய கலாச்சாரத்தின் ஒரு அங்கமாக இருந்து வருகின்றது. மக்கள் தங்களுடைய குடும்பத்தின் எதிர்கால பாதுகாப்புக்காக தங்கத்தில் முதலீடு செய்வது வழக்கமாக இருந்து வருகிறது.
அதிலும் குறிப்பாக இந்தியாவில் தங்கத்தின் மீது பொதுமக்கள் காலங்காலமாக அதிக நம்பிக்கை கொண்டுள்ளார். அதோடு தங்கம் அவர்களுடைய நம்பிக்கையுடன் வலுவாக நிற்கும் விதத்தில் செயல்பட்டு வருகிறது. தங்கம் எப்போதும் பணவீக்கத்திற்கு எதிரான ஒரு பாதுகாப்புத் திறனை நிரூபணம் செய்திருக்கிறது.
விக்னஹரடா சோல்ட் லிமிட்டட் தலைமை நிர்வாக அதிகாரி மகேந்திர லுனியா டிஜிட்டல் தங்க முதலீடு மற்றும் முதலீட்டாளர்கள் தங்களுடைய பணத்தை தங்கத்தில் போடுவதற்காக முன்னர் சிலவற்றை அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்கள்.
எந்த அளவில் தங்கத்தில் முதலீடு செய்ய விருப்பம் கொள்வோர் மிக கவனமாக செயல்படுவதற்கு உதவும் விதத்தில் சில முக்கிய அம்சங்களை பார்க்கலாம்.
ஒரு முதலீட்டாளர் எவ்வளவு தங்கம் வைத்திருக்க வேண்டும் என்பதை விளக்கிய மகேந்திர லூனியா எப்போதும் ஈக்விட்டியை நோக்கி ஒரு மிகப்பெரிய ஒதுக்கீட்டை கொண்டிருக்க வேண்டும், அதே நேரம் ஒருவர் தங்கத்தின் மீது குறிப்பிடத்தக்க அளவு ஒதுக்கீட்டையும் கொண்டிருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
பாதகமான சந்தை சூழ்நிலைகளில் தங்கத்திற்கு குறைந்தபட்சம் 7 முதல் 15 சதவீத ஒதுக்கீடு இருக்க வேண்டும். அதோடு பல பாதகமான சமயங்களில் அதனை எதிர்கொள்வதற்கு தங்கத்தின் செயல்திறன் கீழ் பக்க பாதுகாப்பை வழங்குகிறது.
முதலீடு செய்வோருக்கான ஆலோசனைகள், தங்க பத்திரங்கள், உள்ளிட்டவற்றை இணையதளத்தில் எந்த சமயத்திலும் ஒருவர் புழக்கத்துடன் வைத்திருக்க முடியும். அதேநேரம் இதனை செய்வதற்கு சில சமயம் எடுத்துக் கொள்ளும். தங்க பத்திரங்களில் முதலீடு செய்தால் அவற்றிற்கு ஜிஎஸ்டி விதிக்கப்படாது.
அதேநேரம் அதனை பொருளாக வாங்கும்போது 3 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படும் இதனை பலரும் தெளிவாக அறிந்து வைத்துக் கொள்வது மிகவும் அவசியம்.
தங்க பத்திரங்களில் சாத்தியமான விலை அதிகரிப்புடன் இது முதலீட்டாளருக்கு வழக்கமான வரைவை வழங்குகிறது. அதோடு இது பல சமயங்களில் நாம் எதிர்பார்க்காத வரவையும் அளிப்பதற்கு சிறந்தது.
பலருக்கும் தங்கத்தின் தூய்மை ஒரு முக்கிய கவலையாக இருக்கிறது, ஆனால் தங்க பத்திரத்தில் முதலீடு செய்வதால் இந்த கவலை தொடர்பாக யாரும் யோசிக்க வேண்டிய அவசியமில்லை என்று அவர் தெரிவித்தார்.
அதோடு நீண்ட கால முதலீட்டாளர் டிஜிட்டல் தங்கத்தை தடுப்பதன் மூலமாக பணத்தை எப்படி சேமிப்பது என்பது தொடர்பாக தன்னுடைய பார்வையையும் பகிர்ந்துகொண்டார். ஒரு முதலீட்டாளர் நீண்டகாலத்திற்கு தங்கத்தில் முறையான முதலீட்டுத் திட்டத்தின் கீழ் முதலீடு செய்தால் ஒவ்வொரு மாதமும் 3 சதவீத ஜிஎஸ்டி செலுத்த வேண்டும்.
இதுவே தங்க பத்திரங்களில் முதலீடு செய்வதன் மூலமாக இந்த ஜிஎஸ்டி பணத்தை சேமித்து வைத்துக்கொள்ளலாம். தங்கத்தின் முதிர்வு காலம் வரையில் அதனை வைத்திருந்தால் வரிவிலக்கு வழங்கப்படும். அதோடு இது மிகவும் பலவகையில் லாபத்தை வழங்கும் என்று நுனியா தெரிவித்திருக்கிறார்.