சிதம்பரம் நடராஜர் கோயிலின் நிலங்களை விற்பனை செய்த தீட்சிதர்கள்!!

Photo of author

By Vijay

சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சொந்தமான நிலங்களை தீட்சிதர்கள் விற்பனை செய்ததாக கூறி அதற்கான ஆதாரங்களை அறிக்கையாக சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்து சமய அறநிலைத் துறை தாக்கல் செய்துள்ளது. கோயில் வருவாய் கணக்கை தாக்கல் செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கு நீதிபதி சுரேஷ்குமார், சவுந்தர் ஆகியோர்  அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்பொழுது தீட்சிதர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கோயில் நிலங்கள் எதுவும் தீட்சிதர்களிடம் இல்லை என கூறினார். இந்த கோயில் நிலத்தை விற்பனை செய்தது என்பது அறநிலைத்துறை கூறும் குற்றச்சாட்டு என வாதம் செய்தார். இதனை தொடர்ந்து அறநிலைத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 1974, 1985, 1988 ஆம் ஆண்டுகளில் கோயிலுக்கு சொந்தமான நிலங்களை தீட்சிதர்களால் விற்பனை செய்யப்பட்டதை ஆதாரங்கள் உள்ளது என கூறியுள்ளனர். இதில் சிறப்பு தாசில்தார் கட்டுப்பாட்டில் எவ்வளவு நிலம் உள்ளது. கட்டளைதாரர்கள் கட்டுப்பாட்டில் எவ்வளவு நிலம் உள்ளது.

மேலும் அறநிலைத்துறை அறிக்கையில் பதில் அளிக்க பொது தீட்சிதர்கள் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் இந்த வழக்கு விசாரணையை வரும் நவம்பர் மாதம் 14ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது. இந்த பிரச்சனை அனைவரும் மத்தியிலும் பேசும் பொருளாக உள்ளது தீட்சிதர்கள் மீது இந்து சமய அறநிலைத்துறை வழக்கு தொடுத்தது.