விடாமுயற்சி ப்ரீ புக்கிங்!! ஒரே திருவிழா தான் போங்க!!

Photo of author

By Gayathri

விடாமுயற்சி ப்ரீ புக்கிங்!! ஒரே திருவிழா தான் போங்க!!

Gayathri

DILIGENT PRE BOOKING!! Go to the only festival!!

துணிவு படத்திற்குப் பிறகு அஜித் நடிப்பில் வெளியாகும் விடாமுயற்சி அப்டேட்ஸ்கள் கூட ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வந்திருக்கின்றது. மேலும் இயக்குனர் மகிழிடம், அஜித் சாரே இப்படம் திரைக்கு வெளியாகும் போது ஒரே திருவிழாவாகத்தான் இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளாராம். ரெட் ஜெயின்ட் மூவிஸ் தயாரித்துள்ள இப்படத்தை இந்தியாவில் உள்ள அனைத்து பகுதிகளிலும் எந்நூறுக்கும் மேற்பட்ட தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளார்கள். தமிழகத்தில் முழு திரையரங்குகளையும் இப்படம் வெளிவரும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் இப்படத்தில் பணி புரியும் போது அஜித் அவர்களுக்கு பெரும் விபத்து ஏற்பட்டு இருந்தது. அது அப்போது சோசியல் மீடியாவிலும் வைரலாக பரவி இருந்தது. இதன் காரணமாகவும் இந்த படம் பெரும் வெற்றியை பெறும் என மக்கள் மத்தியில் ஒரு பேச்சு உள்ளது. அஜித் அவர்களும் இப்படத்திற்காக பெரும் உழைப்பு உழைத்துள்ளார். படக்குழுவின் பங்கும் குறைந்த பாடு இல்லை. இப்படி இருக்க இப்படத்திற்கான வெளிநாடுகளின் ஒரு சில நாடுகளில் ப்ரீ புக்கிங் துவங்கப்பட்டுள்ளது. துவங்கப்பட்ட சில நேரங்களிலே 30 லட்சத்துக்கு மேல் டிக்கெட் புக் செய்யப்பட்டுள்ளது.