நீயெல்லாம் விஜயகாந்த் ஆளு உனக்கு ஜான்ஸ் கிடையாது!! வடிவேலு தில்லாலங்கடி வேலையை வெளிக்கொண்டுவந்த மீசை ராஜேந்திரன்!!
மீசை ராஜேந்திரன் என்று அழைக்கப்படுபவர் கமொடி நடிகர் ராஜேந்திரநாத். நிறைய படங்களில் நடித்திருக்கும் இவர் பகுதி நேர அரசியல்வாதியாக தேமுதிக-வில் பணியாற்றுகிறார். இதற்கிடையில் சினிமாவில் வாய்ப்பு தருவதாக நடிகர் வடிவேலு தன்னை அவமானப்படுத்திய சம்பவத்தை இணையதளம் ஒன்றில் பகிர்ந்திருக்கிறார் மீசை ராஜேந்திரன். “வடிவேலு ஒரு நாள் அழைத்தார்.
நானும் போனேன். என் முன்னாடி போனில் ஒருவரை தொடர்பு கொண்டார். ‘நம்ம மீசை ராஜேந்திரன் இருக்கார்ல, ஆமா ஆமா சாமி படத்துல எல்லாம் வருவார்ல அவர் தான் சரி பங்காளி அவரை போட்டுடலாம், நாளைக்கு அவரை வரச் சொல்லிடுறேன்’ என்று பேசி போனை வைத்தார். பிறகு என்னிடம் பேச ஆரம்பித்தார். ‘சரி நீங்க காலை 7 மணிக்கு டிஆர் கார்டன் வந்துருங்க என்று வடிவேலு கூறினார்.
நானும் சரியாக 7 மணிக்கு அங்கே போய்விட்டேன். போனால், அங்கு சிங்கமுத்து மகன் ஹீரோவாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. படத்தின் பெயர் மாமதுரை என் நினைக்கிறேன். டீக்கடையில் ஒரு சீன், வடிவேலு-பெசண்ட் ரவி இருவரும் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போது வடிவேலு உடன் இருப்பவர்கள் என்னிடம் எதற்காக நிற்கிறீர்கள் என்று கேட்டார்கள். நேற்று வடிவேலு அண்ணனை சந்தித்தேன், அவர் தான் இன்று வரச் சொன்னார் என்று கூறினேன். ‘நீங்க வேற நீங்க பண்றதை தான் பெசண்ட் ரவியை வெச்சு எடுத்துட்டு இருக்காங்க என்று கூறினார்கள்.
அது முடிய 8.30 மணி ஆகிடுச்சு. ஷூட் முடித்துவிட்டு நாற்காலியில் அமர்ந்திருந்தார் வடிவேலு. நான் போய், ‘அண்ணே வணக்கம் வரச் சொல்லிருந்திங்க என்றேன். நீங்கெல்லாம் விஜயகாந்த் ஆளு உங்களுக்கெல்லாம் சான்ஸ் இல்லை என்று முகத்தில் அடித்த மாதிரி பேசினார். எனக்கு பயங்கர கோபம். ஆனாலும் சினிமாவில் அவர் பெரிய ஆளச்சே. அதனால் நன் எதுவும் சொல்லவில்லை. அண்ணே நீங்க தானே வர சொன்னிங்க, நான் சிவனேனு தானே உட்கார்ந்திருந்தேன். ஒரே ஒரு விஷயம் மட்டும் சொல்றேன் அண்ணே இனிமே இந்த மாதிரி யாக்கும் பண்ணாதிங்கண்ணே’ என்று கூறிவிட்டு வந்துவிட்டேன். மீசை ராஜேந்திரன் தற்போது youtube சேனல் களில் சினிமா குறித்தும் பல நடிகர்கள் குறித்தும் பேசி வருகிறார்.
அந்த வகையில் தற்போது youtube சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் நடிகர் வடிவேலு குறித்து கோவத்தில் பல விஷயங்களை கூறியுள்ளார். அதில் வடிவேலு குடிப்பதற்காக பல தில்லாலங்கடி வேலைகளை பார்த்து வருகிறார். அவருக்கு பட வாய்ப்புகள் பறிபோவதற்கு காரணம் அவருடைய செயல்தான். இதுவரையில் அவரோட நான்கு படங்கள் நடித்துருக்கிறேன். படபிடிப்புக்கு சரியான நேரத்திற்கு வரமாட்டார். திரைப்படங்களில் நீங்கள் பார்க்கும் வடிவேலுவிற்கும் செட்டில் இருக்கும் வடிவேலுக்கும் வித்தியாசம் உள்ளது.
நடிக்கும் படத்திற்கெல்லாம் உதவியாளர் மேக்கப், டச் அப், கார் மற்றும் டிரைவர் என அனைவருக்கும் சேர்த்து தயாரிப்பாளரிடம் பத்தாயிரம் ரூபாய் மொத்தமாக வாங்கி கொள்வார். கொடுப்பது என்னவோ 100, 200, பிரித்து கொடுத்துவிட்டு மீதி பணத்தை ஆட்டைய போட்டு அந்த பணத்தை குடித்தே காலி செய்து விடுவார் என்று கூறியுள்ளார் ராஜேந்திரன்.