Vijay Tvk: சினிமாவில் உச்சத்தில் இருக்கும்போதே அரசியலுக்கு வந்திருக்கிறார் விஜய். தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கி வேலைகள் வேகமாக நடைபெற்று வருகிறது. ஜனநாயகன் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் முடிந்ததும் முழுநேர அரசியலில் அவர் ஈடுபடவிருக்கிறார். சமீபத்தில்தான் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
அதில் பேசிய விஜய் வழக்கம்போல் திமுகவை விமர்சித்து பேசினார். மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் அவர்களே.. மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே.. பெயரை மட்டும் வீரப்பாக சொன்னால் போதாது அவர்களே. செயலிலும் காட்ட வேண்டும் அவர்களே.. அணை போட்டு ஆற்றை வேண்டுமானாலும் தடுக்கலாம்.. காற்றை தடுக்க முடியாது. மீறி தடுக்க நினைத்தால் சாதாரண காற்று சூறாவழியோ அல்லது சக்திமிக்க புயலாக மாறும்’ என பேசினார்.
அதோடு, வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் தவெக-வுக்கும் திமுகவுக்கும் இடையேதான் போட்டி என்றும் பேசினார். இதுதான் திமுகவினரை கோபப்படுத்தி இருக்கிறது.
எனவே, திமுகவை சேர்ந்த பலரும் விஜயை திட்ட துவங்கிவிட்டனர்.
இந்நிலையில், திமுக விசுவாசியும், பிரச்சார பீரங்கியுமான திண்டுக்கல் லியோனி விஜயை மிகவும் மோசமாக விமர்சனம் செய்திருக்கிறார். டம்மி துப்பாக்கி, அட்டக்கத்தி, அரசியல் மக்கு ஒன்னு மேடையில ஹா ஹூன்னு கத்திக்கிட்டு இருக்கு. காலையில நாய் ஒன்னு சூரியன் பின்னாடி இருக்கறது தெரியாம நின்னு தனது நிழல் பெருசா தெரியுறத பார்த்து நாமதான் பெரிய ஆள். 2026ல் நாமதான்னு கத்திக்கிட்டு இருக்கு.. நேரம் ஆக ஆக சூரியன் மேல வந்தா அந்த நாயோட நிழல் கூட தெரியாது.. சூரியன் தன் பவரை காட்டினா நம்ம இருக்கிற இடம் கூட தெரியாம போயிடுவோம்’ என பேசியிருக்கிறார்.