தமிழகத்திற்கு பெருமை சேர்த்த திண்டுக்கல் மாணவன்! 28 ஆண்டுகளுக்கு அங்கீகாரம் கொடுத்த Google நிறுவனம்!
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே தாமரைப்பாடியை சேர்ந்த மாரிமுத்து என்பவரின் 13 வயது மகன் பிரனேஷ். இவர் அங்கு உள்ள தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். பிரனேஷ் சிறுவயது முதலே கம்ப்யூட்டர் மீது அவருக்கு அதிவிதமான ஈர்ப்பு இருந்துள்ளது . அவரின் ஆர்வம் தற்பொழுது அவரை மொபைல் செயலி உருவாக்கச் செய்துள்ளது.
13 வயது நிரம்பிய பிரனேஷ் Whatsapp செயலியை போன்றே புதிதாக ஜெட் லைவ் சாட் என்ற செயலியை உருவாக்கி உள்ளார்.
சிறுவனின் கடும் முயற்சியால் உருவாக்கப்பட்ட இந்த செயலியை கூகுள் நிறுவனம் ஏற்று கூகுள் பிளே ஸ்டோரில் இணைக்கப்பட்டுள்ளது.
ஃபேஸ்புக் போலவே அனைத்து தகவல்களின் மீதும் லைக் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இமோஜிகளை பதிவிடுமாறு உருவாக்கியுள்ளார்.
மேலும் ஒரு முழு திரைப்படத்தையே இந்த செயலி மூலம் மற்றொருவருக்கு அனுப்ப முடியும்.
இவரின் ஜெட் லைவ் சாட் செயலிக்குக் கூகிள் நிறுவனம் 2048 ஆண்டு வரை அங்கீகாரம் கொடுத்து பிரனேஷின் திறமையை கண்டு வியந்து பாராட்டியுள்ளது.