எம்.ஜி.ஆர் தாத்தாவும், ஜெயலலிதா பாட்டியும்; தொடரும் திண்டுக்கல் சீனிவாசனின் மரண காமெடிகள்!!

Photo of author

By Jayachandiran

எம்.ஜி.ஆர் தாத்தாவும், ஜெயலலிதா பாட்டியும்; தொடரும் திண்டுக்கல் சீனிவாசனின் மரண காமெடிகள்!!

Jayachandiran

Updated on:

எம்.ஜி.ஆர் தாத்தாவும், ஜெயலலிதா பாட்டியும்; தொடரும் திண்டுக்கல் சீனிவாசனின் மரண காமெடிகள்!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 306 ஊராட்சிகளிலும் “அம்மா இளைஞர் விளையாட்டு” திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மாணவ, மாணவியர்களிடம் எம்.ஜி.ஆர் யாரென்று தெரியுமா என்று கேட்டபோது, மாணவர்கள் தெரியும் என்று பதில் அளித்தனர். எப்படி தெரியும் என மீண்டும் கேட்டதற்கு, சினிமாவில் பார்த்துள்ளோம் என்று மாணவர்கள் கூறினர்.

இதையடுத்து பேசிய அமைச்சர், எம்.ஜி.ஆர் உங்களுக்கு தாத்தா மாதிரி என்றும், ஜெயலலிதா உங்களுக்கு பாட்டி மாதிரி என்றும் மாணவரிடம் கூறினார். இதைக் கேட்டதும் மாணவர்களும், மற்றவர்களும் வயிறு குலுங்க சிரித்தனர். மேலும், நிகழ்ச்சிக்கு ஏற்றவாறு “நல்ல பெயரை வாங்க வேண்டும் பிள்ளைகளே” என்ற பாடலை பாடி அசத்தினார். இதைக்கேட்டு அனைவரும் மீண்டும் சிரித்தனர்.

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் கடந்தகால அரசியல் காமெடிகள் :

சம்பவம் 1 : ஜெயலலிதா உடல்நிலை சரியில்லாமல் அப்பல்லோ மருத்துவ மனையில் இருந்தபோது, 5 நாட்களுக்கு ஒருமுறை நாங்கள் ஜெயலலிதாவை சந்தித்தோம் என்று அதிமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் கூட்டதில் பேசியிருந்தார். (திண்டுக்கல் மணிகூண்டு அருகே கூட்டம் நடைபெற்றது) ஜெயலலிதா இறந்த பிறகு, நாங்கள் யாருமே ஜெயலலிதாவை பார்க்கவில்லை. இட்லி சாப்பிட்டார், சட்னி சாப்பிட்டால் என்று நாங்கள் சொன்னது எல்லாமே பொய் என அந்தர் பல்டி அடித்தார். இதற்காக மன்னிப்பும் கேட்டிருந்தார்.

சம்பவம் 2 : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை தமிழக அரசு சார்பில் (2017 – 2018) கொண்டாட அறிவிப்பு செய்யப்பட்டது. மதுரையில் விழாவுக்கான அடிக்கல் நாட்டுவிழாவில், வெளி மாநில தலைவர்களைஅழைக்கும் திட்டம் உள்ளதா..? என்ற செய்தியாளரின் கேள்விக்கு, “எம்.ஜி.ஆரை தமிழகத்தை தவிர்த்து யாருக்கு தெரியும்..? அதனால் யாரையும் அழைக்கும் திட்டமில்லை என்று ஒரு குண்டை போட்டார்.

இந்த சர்ச்சை பேச்சு குறித்து பல்வேறு தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது. பிறகு, எம்.ஜி.ஆரை பற்றி அறிந்தவர்களையும், அவரோடு இருந்த நபர்களையும் அழைப்போம். அவரை பற்றி அறியாதவர்களை அழைக்க வேண்டுமா என்று மழுப்பலாக விளக்கம் தெரிவித்து அனைத்து விமர்சனத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்தார்.

சம்பவம் 3 : தமிழ்நாட்டில் நடக்கும் கொள்ளைக்கும், கொலைக்கும் தமிழக அரசுக்கும் என்ன சம்பந்தம் என்று காமெடியாக பேசினார். மக்களவை தேர்தலில் பாமக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்தபோது, மாம்பழம் சின்னத்திற்கு வாக்கு கேட்காமல் ஆப்பிள் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு பேசியதும் குறிப்பிடத்தக்கது.

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் பொறுப்பற்ற பேச்சுகளை நிறுத்த வேண்டும் என்றால், அவரது வாயில் பெரிய திண்டுக்கல் பூட்டை போட்டுதான் பூட்ட வேண்டும் என்று சொந்தகட்சியினரே முன்பு கூறினர்.