“அணியில் தினேஷ் கார்த்திக்கின் ரோல் என்ன?” முன்னாள் ஆஸி வீரர் கேள்வி

0
193

“அணியில் தினேஷ் கார்த்திக்கின் ரோல் என்ன?” முன்னாள் ஆஸி வீரர் கேள்வி

இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் இறங்கும் பேட்டிங் ஆர்டர் குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய அணி முதல் டி 20 போட்டியை தோற்ற நிலையில் அது குறித்த பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதில் பவுலிங், பீல்டிங் குறைகளை தாண்டி இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளன.

அந்த போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்களை இழந்த போது அடுத்த பேட்ஸ்மேனாக தினேஷ் கார்த்திக் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட போது அக்ஸர் படேல் வந்தார். அவர் 6 ரன்களை சேர்த்து வெளியேறினார். அதன் பின்னர் வந்த தினேஷ் கார்த்திக்கும் 6 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

இந்நிலையில் தினேஷ் கார்த்திக் என்ற பேட்ஸ்மேன் இருக்கும் போது ஏன் அக்ஸர் படேலை இறக்க வேண்டும் என கவாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார். அதுபோலவே முன்னாள் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் மேத்யு ஹெய்டனும் தினேஷ் கார்த்திக் இன்னும் மேல் வரிசையில் ஆடவேண்டும் எனக் கூறியுள்ளார்.

அதில் “தினேஷ் கார்த்திக்கின் அணியில் என்ன என நான் யோசிக்கிறேன். அவரை குறைவாக நான் சொல்லவில்லை. அவரின் இறுதி ஓவர் அதிரடி ஆட்டத்தை நானும் ரசித்திருக்கிறேன். அதை அவர் இன்னும் சீக்கிரமாக இறங்கியும் செய்யமுடியும் என நான் நினைக்கிறேன். அதனால் அவரை சீக்கிரமாக பேட் செய்ய யோசிக்கக் கூடாது” எனக் கூறியுள்ளார்.

Previous articleரோஹித் ஷர்மா இதைக் கண்டிப்பாக செய்யவேண்டும்… சுனில் கவாஸ்கர் கருத்து
Next articleபோண்டா மணியின் உடல்நிலைப் பற்றி கேட்ட பத்திரிக்கையாளர்… வடிவேலு அளித்த பதில்!