இயக்குனர் & நடிகர் ஜி எம் குமார் மருத்துவமனையில் அனுமதி!

0
136

இயக்குனர் & நடிகர் ஜி எம் குமார் மருத்துவமனையில் அனுமதி!

இயக்குனர் ஜி எம் குமார் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அறுவடை நாள் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஜி எம் குமார். இவர் இயக்குனர் பாக்யராஜின் கதை இலாகாவில் எழுத்தாளராக பல ஆண்டுகள் பணியாற்றியவர். வித்தியாசமான கதைக்களன்களைக் கொண்ட இரும்பு பூக்கள் மற்றும் உருவம் ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார். கமல்ஹாசனின் காக்கி சட்டை திரைப்படத்தை கதையை இயக்குனர் லிவிங்ஸ்டனோடு இணைந்து எழுதியவர்.

வெயில் மற்றும் மாயாண்டி குடும்பத்தார் ஆகிய படங்கள் இவரை மிகச்சிறந்த நடிகராக அடையாளம் காட்டின. பாலா இயக்கத்தில் வெளியான அவன் இவன் திரைப்படத்தில் ஐனஸ் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்த இவர் தொடர்ந்து தாரை தப்பட்டை மற்றும் கர்ணன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் அவர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். சிகிச்சையில் அவர் உடல்நலம் தேறி வருவதாகவும் சொல்லப்படுகிறது.

Previous articleகொத்து கொத்தாக செத்து மடியும் அப்பாவி உயிர்கள் !!துர்நாற்றத்தால் சூழ்ந்த அப்பகுதி !!காரணம் என்ன ?
Next articleதூத்துக்குடி மாவட்டத்தில் விபத்தில் முதியவர் பலி! போலீசார் விசாரணை!