தமிழ் சினிமா துறையில் சேது திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பாலா. அதனைத் தொடர்ந்து பல வெற்றி படங்களை தமிழ் சினிமாவிற்கு தந்தவர் இவர் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அப்படிப்பட்ட பாலாவிற்கு 25 ஆவது படத்திற்கான கொண்டாட்டத்தை தொடர்ந்து பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டது.
அந்த பாராட்டு விழாவில் நடிகர் சிவகுமாரன் அவர்கள் பாலாவிடம் பல கேள்விகளை கேட்டு இருக்கிறார். அதில் சிவகுமாரை கேலி செய்வதுபோல பாலாவின் உடைய பதில் அமைந்ததால் கோபமடைந்த சிவக்குமார் அவர்கள் இயக்குனர் பாலாவின் மீது கேஸ் போட போவதாக எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
இயக்குனர் பாலாவின் உடைய 25 வது பாராட்டு விழாவில் நடந்தது பின்வருமாறு :-
விழா மேடையில் இருந்த சிவக்குமார், இயக்குனர் பாலாவிடம் பிதாமகன் படத்தில் தகதக என ஆடவா என்ற என்னுடைய பாடலை என் மகன் சூர்யாவையும் சிம்ரனையும் ஆட வைத்து என்னை கிண்டல் செய்துவிட்டாய். உண்மையை சொல், அந்த படத்தில் இந்த பாடலினை எதற்காக வைத்தாய் என கேட்டிருக்கிறார்.
மேலும், சிவகுமார் அவர்கள் இந்த பாடலினை என்னை அவமானப்படுத்துவதற்காக வைத்தாயா அல்லது கேலி செய்வதற்காக வைத்தாயா என்று கேட்டிருக்கிறார். அதற்கு சிரித்தபடி பதில் அளித்த பாலா அவர்கள், அந்த பாட்டும் உங்க ஆட்டமும், உங்க கூட ஆடியவர்கள் ஆட்டமும் பார்க்கவே ரொம்பவும் நகைச்சுவையாக இருந்தது அதனால்தான் வைத்தேன் என்று தெரிவித்திருக்கிறார்.
இதனைக் கேட்ட சிவகுமார் அவர்கள், அடப்பாவி, உலகம் முழுவதும் கொண்டாடின அந்த பாடல் நகைச்சுவையா இருந்துச்சா, உன்மேல கேஸ் போடப் போறேன். என்னய்யா இப்படி சொல்றான் இவன், அடப்பாவிகளா என சிரித்துக்கொண்டே பேசியது ரசிகர்களையும் சிரிப்பில் ஆழ்த்தியது.