“சேது,பிதாமகன், அவன் இவன் போன்ற படங்களை இயக்கி பிரபலமானவர்தான் பாலா. இவர் திரைப்படத்துறையில் ஈடுபட்டு 25 வருட காலம் ஆகிற்று. சமீபத்தில் இவர் ‘வணங்கான்’ என்ற திரைப்படத்தை இயற்றியுள்ளார். “பாலா 25 வருட நிகழ்ச்சியையும், வணங்கான் பட இசை வெளியீட்டையும் ஒன்றாக திரைப்பட பிரபலங்கள் சேர்ந்து கொண்டாடினர்”.
அந்நிகழ்ச்சியில் ‘இயக்குனர் மணிரத்தினம், சிவக்குமார், சூர்யா, சிவகார்த்திகேயன், அருண் விஜய், மிஷ்கின், சமுத்திரகனி, மாரி செல்வராஜ், பாக்கியராஜ் போன்ற பலரும் கலந்து கொண்டனர்’. ஆனால் இந்த திரைப்படத்தில் ஆரம்பத்தில் ‘சூர்யா’ நடிப்பதாக இருந்தது. பின்னர் இப்படத்தை விட்டு விலகினார். அதை தொடர்ந்து ‘அருண் விஜயின் நடிப்பில் இப்படம் எடுக்கப்பட்டு உள்ளது’.
எனினும், பாலா திரைப்படவியல் 25 விழாவில் சூர்யா கலந்து கொண்டது ரசிகர்களை ஆச்சரியப் படுத்தியது. மேலும் அவர் மேடையில் பேசுகையில், பாலா சார் இயக்கத்தில் வெளிவந்த எனது ‘நந்தா’ படம் மூலம் தான் என் திரைப்பட வாழ்க்கை மாறியது என்றார். “நந்தா படத்தில் அவர் எனக்கு கொடுத்த கதாபாத்திரத்தின் மூலம் தான் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் எனக்கு வந்தன” எனக்கூறி தங்க சங்கிலி ஒன்றை இயக்குனர் பாலாவிற்கு பரிசளித்தார்.
அன்று இந்நிகழ்ச்சியிலேயே இன்னொரு சுவாரஸ்யமான நிகழ்வும் அரங்கேறி உள்ளது. அருண் விஜய், சிவகார்த்திகேயன் இடையே ஏற்கனவே சில பிரச்சினைகள் உள்ளது. சிவகார்த்திகேயனின் ஒரு பட வெளியீட்டின் போது ‘அருண் விஜய் யாரெல்லாம் மாஸ் காட்டுவது என்ற விவஸ்தயே இல்லை’ எனக் கூறி அப்போது பெரும் சர்ச்சை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. எனினும், இந்நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டு இருப்பதும் ஆச்சரியமூட்டுகிறது.
சிவா மேடையில் பேசுகையில், எனது “14 வயதில் சேது படம் வெளியானது. அப்படம் ‘நெகட்டிவ் என்டிங்’ என்றாலும் பெரிதும் வெற்றி பெற்றது. பாலா சார் ஒவ்வொரு படத்திலும் அவரது தனித்திறமையை வெளிக்காட்டி இருப்பார். அவர் இயற்றிய ‘அவன் இவன்’ படத்திற்கு நான் தான் ஹோஸ்ட் செய்தேன். அப்பொழுது பயந்து பயந்து தான் பேசுவேன் என்றார்”. அந் நிகழ்ச்சியிலேயே, “அருண் விஜய் அண்ணா எனக்கு போன் செய்து, தம்பி நீங்கள் கட்டாயமாக வரவேண்டும் என்றார். அதனால் தான் நான் வந்தேன். அவர் என்னைவிட மிகவும் சீனியர். எனினும் அவர் இன்னமும் ஒவ்வொரு ரோலையும் சிறப்பாக செய்வார்” என்றார் சிவா.