தமிழ் சினிமாவின் முகத்தை மாற்றியவர் பாரதிராஜா. கிராமத்து மனிதர்களின் வாழ்க்கை, காதல், கோபம், வக்கிரம், சாதி பிரச்சனை என எல்லாவற்றையும் தனது திரைப்படங்களில் பிரதிபலித்தவர் இவர். இவர் வந்த பின்னர்தான் கிராமத்து மக்களின் வாழ்வியலே பலருக்கும் புரிந்தது. பதினாறு வயதினிலே படம் மூலம் தமிழ் சினிமாவில் களமிறங்கி பாரதிராஜா தொடந்து பல திரைப்படங்களையும் இயக்கினார்.
கடலோர கவிதைகள், வேதம் புதிது, சிகப்பு ரோஜக்கள், முதல் மரியாதை என தமிழ் சினிமாவின் முக்கிய திரைப்படங்களை இயக்கியுள்ளார். கடந்த சில வருடங்களாக அவர் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். தற்போது 85 வயது ஆகிவிட்டதால் முதுமை காரணமாக வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். அந்தநிலையில்தான், சில நாட்களுக்கு முன்பு அவரின் மகன் மனோஜ் மாரடைப்பில் இறந்து போனார்.
தாஜ்மகால் திரைப்படம் மூலம் மனோஜை நடிகராக்கினார் பாரதிராஜா. அதன்பின் 25 படங்கள் வரை நடித்தும் மனோஜால் முன்னணி ஹீரோவாக மாற முடியவில்லை. இந்த வருத்தம் மனோஜுக்கும், பாரதிராஜாவுக்கும் பல வருடங்களாகவே இருந்தது. ஒருபக்கம், மனோஜ், பாரதிராஜா மற்றும் அவரின் மனைவி என மூவரும் குடும்ப பிரச்சனை காரணமாக தனித்தனியாக வாழ்ந்து வந்தனர்.
மகன் மனோஜின் மரணம் பாரதிராஜாவை ரொம்பவே பாதித்திருக்கிறது. சமீபத்தில் கூட வீட்டின் மாடியில் இளையராஜாவின் தம்பி கங்கை அமரன் பாரதிராஜாவுக்கு அவரின் படங்களில் இடம் பெற்ற பாடல்களை பாடிய படியே பழைய பசுமையான நினைவுகளை நியாபகப்படுத்திய வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது.
இந்நிலையில், பாரதிராஜாவின் தற்போதையை நிலை பற்றி அவரின் தம்பி ஜெயராஜ் பேசியிருக்கிறார். அண்ணன்தான் ரொம்ப மோசமான நிலையில் இருக்காரு. பிள்ளை மேல அப்படி உசுர வைத்திருந்தார். சில நேரங்களில் மனோஜ் உயிரோடு இருக்கான் எனவும் அவருக்கு தோணுது. திடீர்னு மனோஜ கூப்பிடு என சொல்லுகிறார். வரவங்க கிட்ட சொல்லி சொல்லி அழுது அழுது ஒரு மாதிரி ஆயிட்டாரு. மற்றவர்களை சுலபமாக சமாதானம் செய்துவிடலாம். ஆனால், அவரை சமாதனப்படுத்துவதுதான் மிகவும் கஷ்டமாக இருக்கு.
எப்ப பாத்தாலும் மனோஜோட போட்டோவை பார்த்து அழுதுக்கிட்டே இருக்காரு’ என சொல்லியிருக்கிறார்.