வம்புக்காரி மீரா மிதுனுக்கு  கடும் கண்டன அறிக்கை: இயக்குனர் சங்க தலைவர்!! இவர் வெகுண்டெழு காரணம் இதுதானா? தெரியாம போச்சே!!

Photo of author

By Parthipan K

பாலிவுட் முதல் கோலிவுட் வரை யாரையும் விட்டுவைக்காமல் வம்புக்கு இழுக்கும் வம்புகாரி மீரா மிதுன் நெட்டிசன்கள் சரமாரியாக கழுவி கழுவி ஊற்றினாலும் அடங்கமாட்டார்.

கதாநாயகிகள் எல்லாம் என்னை காப்பி அடிக்கின்றனர் என்று ஹீரோயின்களை சீண்டிய மீரா மிதுன், அதைத்தொடர்ந்து நடிகர் விஜய், சூர்யா, கமலஹாசன் என அவர்களையும், அவர்களுடைய மகள், மகன், மனைவி குடும்பத்தாரையும் தரக் குறைவாக பேசிய வீடியோக்களை வெளியிட்டு பெரும் சர்ச்சைக்கு உள்ளானார்.

அவர்களுடைய ரசிகர்கள் பலவகையில்  அவமானப்படுத்தினர். இறுதியில் மீரா மிதுன் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்து தங்கள் ஆத்திரத்தைத் தீர்த்துக் கொண்டனர்.

அப்படியும் அடங்காத  மீரா மிதுன், தற்போது சினிமாவுக்கே வராத விஜய்யின் மகனையும் வம்புக்கு இழுத்துள்ளார்.  இதையெல்லாம் பார்த்த சினிமாவின் மூத்த உறுப்பினரான, இயக்குனர் சங்க தலைவருமான பாரதிராஜா வெகுண்டெழுந்து கடும் கண்டன அறிக்கை ஒன்றை மீராமிதுன் அனுப்பியுள்ளார்.

இதில் அவர் தமிழ் சினிமா பிரபலங்களை பற்றிய அவதூறு பேச்சுக்களை நிறுத்த வேண்டும் என்று 4 பக்க அறிக்கையுடன கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இவர் இப்போது இந்த கண்டனத்தை தெரிவிக்க காரணம் என்னவென்றால், மீராமிதுன் ஒரு வீடியோவில் விஜய்க்கு நடிக்கவே தெரியாது? என்று பாரதிராஜா தான் சொன்னார் என்பதை பதிவிட்டு இருந்ததால் ஆவேசமடைந்து இப்படி ஒரு கண்டனத்தை தெரிவித்துள்ளார் இயக்குனர் பாரதிராஜா.