ஷங்கர் படத்தில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்!

Photo of author

By Parthipan K

ஷங்கர் படத்தில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்!

விஜய் சேதுபதியின் நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான பீட்சா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தான் கார்த்திக் சுப்புராஜ்.இதையடுத்து ஜிகர்தண்டா,இறைவி மற்றும் மெர்குரி போன்ற வித்தியாசமான கதையம்சம் கொண்டப் படங்களையும் இயக்கினார். அதற்கடுத்து மிகவும் புகழ் பெற்ற இவர் ரஜினியின் நடிப்பில் பேட்ட, தனுஷின் நடிப்பில் ஜகமே தந்திரம் போன்ற படங்களை இயக்கியதன் மூலம் முன்னணி இயக்குனர் ஆனார்.

தற்போது விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் இணைந்து நடிக்கும் சியான் 60 என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடந்து கொண்டு வருகிறது. இந்நிலையில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ஷங்கருடன் கூட்டணி அமைத்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இயக்குனர் ஷங்கர் அடுத்ததாக ராம் சரணை வைத்து தெலுங்கு படத்தை இயக்க இருக்கிறார்.

அப்படத்திற்கு கார்த்திக் சுப்புராஜ் தான் கதை எழுதி உள்ளாராம்! இது முழுக்க முழுக்க அரசியல் கதை தான் என கூறப்படுகிறது. இயக்குனர் ஷங்கர் மற்றும் இயக்குனரின் கதையை படமாக்குவது இதுவே முதன்முறையாகும். விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என சினிமா துறை எதிர்பார்க்கப்படுகிறது