ஆங்காரத்தில் நிற்கும் இயக்குனர் லீனா மணிமேகலை! உன்ன காளிதேவி சும்மா விடமாட்டாள்??

Photo of author

By Parthipan K

ஆங்காரத்தில் நிற்கும் இயக்குனர் லீனா மணிமேகலை! உன்ன காளிதேவி சும்மா விடமாட்டாள்??

 

கடவுளுக்கே அடுக்காத செயல் ஹிந்து கடவுளான காளிமா தேவி சிகரெட் பிடிப்பது போன்று போஸ்டரை வெளியிட்டுள்ளது. இதனால் இந்துக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளார் பெண் சினிமா இயக்குனர் லீனா மணிமேகலை.

 

ஹிந்துக் கடவுள்களை அகோரமாக அவமதிக்கும் வகையில் சிலர் நடந்து கொள்வது உலகம் முழுவதும் உள்ள ஹிந்துக்களை கோபப்படுத்தி வருகிறது. செங்கடல்,மாடத்தி ஆகிய படங்களை இயக்கிய லீனா மணிமேகலை தற்போது காளி என்ற டாகுமென்டரி படம் ஒன்றின் முதல் போஸ்டரை வெளியிட்டுள்ளார். இப்படத்தை இயக்கி, காளி கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார் லீனா மணிமேகலை.

 

அந்தப் போஸ்டரில் காளிதோற்றத்தில் ஒரு பெண் புகை பிடிப்பது போன்ற போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதற்கு ஹிந்துக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. ‘ArrestLeenaManimekalai’ என்ற ஹேஷ்டேக்கில் பலரும் தங்களது எதிர்ப்புகளைப் பதிவு செய்து லீனா மணிமேகலையைக் கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து வருகின்றனர்.

 

இது குறித்து லீனா மணி மேகலை கூறும்போது ஒரு மாலைப் பொழுது கனடா நாட்டில் டோரோண்டோ நகரில் காளி தோன்றி வீதிகளில் உலா வருகிறார். அப்போது நடக்கும் சம்பவங்கள் தான் படம். படத்தைப் பார்த்தா arrest leena manimekalai ஹேஷ்டேக் போடாம love you leena manikemalai ஹேஷ்டேக் போடுவாங்க என தெரிவித்துள்ளார்.

விளக்கம் எல்லாம் ஓகே தான். குறும்படமோ, பெரும் படமோ இல்லை ஆவணப்படமோ எதுவாக இருந்தாலும் சரி. பப்ளிசிட்டி கிடைக்க வேண்டும் என்பதற்காக ஹிந்து கடவுள்களை ஏன் இப்படி சித்தரிக்க வேண்டும் என்பதே அனைவரின் கேள்வி. சமீபகாலமாக ஹிந்து கடவுள்களை இழிவுப்படுத்தும் விதமான இதுமாதிரியான கொடூர சிந்தினையுடன் படமெடுக்க சிலர் கிளம்பி வருகின்றனர். படத்தில் அது மாதிரியான காட்சிகள் வைத்து பப்ளிசிட்டி தேடி வருகின்றனர். இப்படியே சென்றால் சினிமா காட்சிகளுக்கு சென்சார் இருப்பது போன்று போஸ்டர் டிசைன்களுக்கும் சென்சார் கொண்டு வர வேண்டும் போலிருக்கிறது.

 

சென்சார் செய்தால் உடனே படைப்பு சுதந்திரம் பறிபோய் விடுகிறது என்று ஒரு கூட்டம் நிச்சயம் குரல் கொடுக்கும். படைப்பு சுதந்திரம் அவசியமே ஆனால் படைப்பு சுதந்திரம் என்ற பெயரில் ஒரு மதத்தை இழிவுப்படுத்துவது என்ன மாதிரியான சுதந்திரம். ஏற்கனவே நாட்டில் மதத்தை வைத்து நிறைய சர்ச்சைகள் எழுந்து கொண்டிருக்கின்றன. அப்படிப்பட்ட சூழலில் இதுபோன்று போஸ்டரை வெளியிட்டு மேலும் சர்ச்சைக்கு வழிவகுக்கலாமா என ஹிந்து மதத்தவர் கேள்வி எழுப்புகின்றனர். மேலும் இது போன்ற செயல்களை செய்பவர்களை எல்லாம் தகுந்த தண்டனை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.