அஜித்தின் நடிப்பில் கடைசியாக வெளியான விடாமுயற்சி படம் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. இந்த நிலையில்தான் குட் பேட் அக்லி ஒன்று வெளியாகியுள்ளது. குட் பேட் அக்லி படத்தில் அஜித் ரசிகர்களுக்கு பிடித்தமான பல காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது. ஏற்கனவே வெளியான டீசர் மற்றும் டிரெய்லர் வீடியோவில் அஜித் ஏற்கனவே நடித்து வெளியான பில்லா, மங்காத்தா, தீனா போன்ற படங்களின் ரெப்ரன்ஸ் இந்த படத்தில் இருந்தது.
இந்த படத்தில் வில்லனாக அர்ஜூன் தாஸ் நடித்திருக்கிறார். மேலும், திரிஷா, சிம்ரன், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். சமீபத்தில் வெளியான டிரெய்லர் வீடியோ வெளியாகி டபுள் டமாக்காவாக அமைந்திருக்கிறது. ஏனெனில், டீசரில் அமைந்ததை விட பல மடங்கு மாஸான காட்சிகள் டிரெய்லரில் இடம் பெற்றிருக்கிறது. குட் பேட் அக்லி படம் 10ம் தேதியான இன்று உலகமெங்கும் வெளியாகியுள்ளது.
படத்திற்கு நிறைய நெகட்டிவ் கமெண்ட்ஸ்கள் வருகிறது. படம் முழுக்க முழுக்க அஜித் ரசிகர்களுக்காக மட்டுமே உருவாக்கப்பட்டிருக்கிறது. படத்தில் லாஜிக்கும் இல்லை. எமொஷனல் கனெக்ட்டும் இல்லை. படத்தின் முதல் பாதி முழுக்க முழுக்க ரசிகர்களுக்காக மட்டுமே. பல மாஸான காட்சிகள் இருக்கிறது. ஆனால், இரண்டாம் பாதியில் பெரிதாக ஒன்றுமில்லை. அஜித் ஃபேன்ஸ் மட்டுமே ரசிப்பார்கள்’ என சிலர் சொன்னார்கள். அதேநேரம், கதையை எதிர்பார்க்காமல் ஜாலியாக பார்க்கலாம் என்கிற மனநிலை உள்ளவர்களுக்கு மட்டுமே இப்படம் பிடிக்கும். இல்லையெனில் படம் ஏமாற்றும் எனவும் ஒருவர் சொன்னார். அஜித் ரசிகர்களுக்கு Good.. நடுநிலையாளர்களுக்கு Bad.. ஹேட்டர்ஸ்க்கு Ugly என டிவிட்டரில் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், படத்தை பார்த்த இயக்குனர் மோகன் ஜி ‘ஆதிக் இப்படி ஒரு படம் பண்ணுவார்னு எதிர்பாக்கல. பயங்கரமான எண்டர்டெய்னர். ஒரு திருப்தியான படம் பார்த்த ஃபீல் வருது. தல இப்படியெல்லாம் பண்ணுவார்னு எதிர்பார்க்கல.. மங்காத்தா படத்துக்கு அப்புறம் ஃபேன்ஸ் பயங்கரமா என்ஜாய் பண்ணிட்டு வரத இப்பதான் பாக்குறேன்.. லாஜிக்கெல்லாம் பாக்காம போய் படம் பாருங்க.. அஜித் சாரோட மொத்த இமேஜையும் யூஸ் பண்ணி படம் பண்னியிருக்காங்க.. குட் பேட் அக்லி ஒரு பெரிய ரோலர் கோஸ்ட் ரைடு.. எதையும் யோசிக்காமல் படம் பார்த்து என்ஜாய் பண்ணிட்டு வாங்க’ என பாராட்டி தள்ளியிருக்கிறார்.