ஒரு நாள் தப்புல கர்ப்பம் ஆக முடியுமான்னு கேள்வி கேட்ட பெண்ணுக்கு நேர்ந்த கதி

0
244

ஒரு நாள் தப்புல கர்ப்பம் ஆக முடியுமான்னு கேள்வி கேட்ட பெண்ணுக்கு நேர்ந்த கதி

பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் இயக்குனர் மோகன் ஜி அவர்களின் அடுத்த படைப்பாக உருவாகியுள்ள திரௌபதி திரைப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது.

பெண்களுக்கு எதிராக சிலர் குறிப்பிட்ட நபர்களால் நடத்தப்படும் நாடக காதல் குறித்தும், பெண்களின் பாதுகாப்பு குறித்தும் எடுக்கப்பட்டுள்ளதாக இயக்குனர் கூறியுள்ள நிலையில் தமிழக மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது. அதே நேரத்தில் பெரியார் சிந்தனை மற்றும் சாதி ஒழிப்பு போராளிகள் மத்தியில் கலக்கத்தையும் இந்த திரைப்படம் உண்டாக்கியுள்ளது.

அரசியல்வாதிகள் முதல் திரைத்துறையினர் வரை சாதியில்லை,சாதியை ஒழிக்க போகிறோம் என கூறிவரும் நிலையில் இந்த படத்தில் “சாதிகள் உள்ளதடி பாப்பா குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்” என வெளிப்படையாக சாதியை ஆதரிப்பது தான் பெரும்பாலோனோருக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இயக்குனர் கூறியது போல நாடக காதல் என்று எதுவும் இல்லை என பெரியார்வாதிகள் மற்றும் சாதி ஒழிப்பு போராளிகள் கூறிவரும் நிலையில் மூடர் கூடம் படத்தின் இயக்குனர் நவீன் இந்த படம் குறித்த கேள்விக்கு குப்பை குறித்து பதில் கூற விரும்பவில்லை என்று கருத்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் வாலிபர் ஒருவர் காதல் என்ற பெயரில் சிறுமியை ஏமாற்றி கர்ப்பமாக்கிய செய்தியை இயக்குனர் மோகன் ஜி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு மூடர் கூடம் படத்தின் இயக்குனர் நவீன் அவர்களை டேக் செய்து இதற்கு குரல் கொடுக்க மாட்டீர்களா என்று கேள்வியெழுப்பியிருந்தார்.

இதனையடுத்து வழக்கம் போல பெரியர்வாதிகளும், சாதி ஒழிப்பு போராளிகளும் இதை விமர்சனம் செய்து கொண்டிருக்கின்றனர். இதில் ஒருவர் ஒருமுறை தப்பு செய்தால் கர்ப்பம் ஆகிருவாங்களா? என்று பாதிக்கப்பட்ட சிறுமியை குறை கூறும் வகையில் பதிவிட்டிருந்தார்.

தவறு செய்தவரை ஆதரிக்கும் நோக்கத்தில் பதிவிட்ட இவருக்கு சரியான செருப்படி கொடுக்கும் வகையில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். அதில் ஒருவர் அவர் வழியிலேயே “நீங்க வேணா வாங்களேன்.. ஒரு நாள் தப்புல கர்ப்பம் ஆக முடியுமான்னு நாம ரெண்டு பேரும் டெஸ்ட் பண்ணி பாக்கலாம்.. ” என்று பதில் அளித்துள்ளார்.

Previous articleமருத்துவ ரீதியிலான கருக்கலைப்பு திருத்த மசோதா 2020-க்கு அமைச்சரவை ஒப்புதல்
Next articleஇவர் மனது வைத்தால்தான் தோனி விளையாட முடியும்: சுரேஷ் ரெய்னா திட்டவட்டம் !