துப்பறிவாளன் 2’ படத்தில் இருந்து மிஷ்கின் நீக்கமா? அதிர்ச்சி தகவல்

0
153

விஷால், பிரசன்னா நடித்து வந்த துப்பறிவாளன் 2’ என்ற படத்தை இயக்கி வந்த இயக்குனர் மிஷ்கின் திடீரென இந்த படத்தில் இருந்து விலகிவிட்டதாக கூறப்படுகிறது. இந்த படத்தை ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் முடித்துக் கொடுக்க மிஷ்கின் ஒப்பந்தம் செய்திருந்த நிலையில் ஏற்கனவே ஒரு சில கோடிகள் தயாரிப்பாளர் விஷாலிடம் இருந்து மிஷ்கின் வாங்கி உள்ளார்

இந்த நிலையில் மேற்கொண்டு இந்த படத்தை முடிக்க ரூபாய் 40 கோடி தேவை என விஷாலிடம் மிஷ்கின் கேட்டதாகவும் இதனால் அதிர்ச்சி அடைந்த விஷால், துப்பறிவாளன் 2’ படத்திலிருந்து மிஷ்கினை விலக்கிவிட்டதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் மீதமுள்ள சில காட்சிகளை மட்டும் விஷாலே இயக்கி இந்த படத்தை முடிக்க திட்டமிட்டு இருப்பதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று கூறப்படுவதால் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

விஷால் தற்போது ‘சக்ரா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின்னர் அவர் ‘துப்பறிவாளன் 2’ படத்தின் இயக்குனர் பணியை மேற்கொள்வார் என்று கூறப்படுகிறது.

Previous articleசதத்தை தவறவிட்ட வில்லியம்ஸன்:ஆறுதல் அளித்த இஷாந்த் சர்மா! இரண்டாவது நாளில் நியுசிலாந்து ஆதிக்கம் !
Next article’இந்தியன் 2’ விபத்து குறித்து சிம்புவின் சாட்டையடி அறிக்கை!