இயக்குனர் பா.ரஞ்சித் படத்திற்கு இசையமைக்கும் பிரபல இசையமைப்பாளர்! ரசிகர்கள் மகிழ்ச்சி!

Photo of author

By Parthipan K

இயக்குனர் பா.ரஞ்சித் படத்திற்கு இசையமைக்கும் பிரபல இசையமைப்பாளர்! ரசிகர்கள் மகிழ்ச்சி!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக பா.ரஞ்சித் இருந்து வருகிறார்.இவர் இதுவரை தமிழில் ஐந்து திரைப்படங்களை இயக்கி உள்ளார்.ஆனால் குறுகிய காலத்திலேயே இவரின் திரைப்படங்கள் அதிக அளவில் பேசப்பட்டன.மேலும் வெற்றியும் பெற்றன.இதற்குக் காரணம் இவரின் படங்கள் அரசியல் சார்ந்து இருக்கும்.2012ம் ஆண்டு இவர் இயக்கிய அட்டகத்தி திரைப்படம் மூலம் இவர் இயக்குனராக அறிமுகம் ஆனார்.

இந்தத் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.மேலும் வணிக ரீதியாகவும் நல்ல வெற்றியைக் கொடுத்தது.பின்னர் பா.ரஞ்சித் இயக்கத்தில் 2014ம் ஆண்டு மெட்ராஸ் திரைப்படம் வெளியானது.இந்த படத்தில் நடிகராக கார்த்தி நடித்திருந்தார்.வடசென்னையை மையமாக வைத்து கதைக்களம் அமைந்திருக்கும்.இந்த திரைப்படம் பிரம்மாண்ட வெற்றி பெற்றது.அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் இந்த படம் கவர்ந்தது.

இதனையடுத்து இயக்குனர் பா.ரஞ்சித் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து கபாலி என்கிற திரைப்படத்தை எடுத்தார்.2016ம் ஆண்டு இந்த திரைப்படம் வெளியானது.இந்த படமும் நல்ல வெற்றியைக் கொடுத்தது.மலேசியத் தமிழர்கள் குறித்தான கதை என்பதால் இந்த படம் உலக அளவில் நல்ல வரவேற்பைப் பெற்றது.இதனையடுத்து அவர் மீண்டும் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்து காலா திரைப்படத்தை இயக்கினார்.

காலா திரைப்படம் 2018ம் ஆண்டு வெளியானது.இந்த திரைப்படம் மும்பை தாராவி மக்களின் வாழ்க்கையைப் பேசியது.இந்தப் படமும் நல்ல வெற்றியைக் கொடுத்தது.மேலும் இவர் இயக்கிய சார்பட்டா பரம்பரை திரைப்படம் சமீபத்தில் ஓடிடி வலைத்தளத்தில் வெளியானது.இந்தத் திரைப்படமும் வெற்றி பெற்றது.பா.ரஞ்சித் இயக்கிய ஐந்து படங்களுக்கும் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருப்பார்.அனைத்துப் படங்களிலும் பாடல்கள் ஹிட் அடித்தன.

இந்நிலையில் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கும் அடுத்த படமான நட்சத்திரம் நகர்கிறது திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவில்லை என்ற செய்தி வெளியாகியுள்ளது.மேலும் அவர் வேறு இசையமைப்பாளர்களை நாடி வந்தார்.தற்போது அவர் இசையமைப்பாளர் இளையராஜாவுடன் இணைந்து பணியாற்றப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.