சிவகார்த்திகேயன் இல்லாமல் எடுக்கப்படும் அவருடைய படத்தின் 2ம் பாகம்

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நம்பிக்கை நட்சத்திரமாக உருவாகி வருபவர். நடிகர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர்.

ஆரம்ப காலக்கட்டத்தில் மெரினா, மனங்கொத்திப்பறவை, கேடி பிள்ளை கில்லாடி ரங்கா திரைப்படங்களில் நடித்த இவருக்கு 2013 ஆம் ஆண்டு வெளிவந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம் இவருக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய பிரேக் கொடுத்தது.

 

கோலிவுட் டூ டோலிவுட் – தெலுங்கு கற்றுக்கொள்ளும் நடிகர் சிவகார்த்திகேயன்!

இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில், சிவகார்த்திகேயன், சத்யராஜ், ஸ்ரீதிவ்யா, சூரி என்ற கலக்கல் கூட்டணியில் இந்த திரைப்படம் வெளியானது.

இந்த பட்டித்தொட்டி கிராமங்களில் எல்லாம் சிவகார்த்திகேயனை கொண்டு சேர்த்தது என்றே சொல்லலாம். நிஜமான கிராமங்களில் நடக்கும் எதார்த்தமான கதைக்களத்தை கொண்டு இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது.

ஊருக்குள் இளசுகளின் கூட்டணி , அவர்களுக்கும் ஊர் பெரியவர்களுக்குமான தலைமுறை இடைவெளி, அதனால் ஏற்படும் சண்டை சச்சரவுகள், அழகான காதல், நட்பு என ஒவ்வொரு காட்சியிலும் சினிமா பார்ப்பவர்களை மகிழ்ச்சியில் திளைக்க செய்தது.

சிவகார்த்திகேயன்-ஸ்ரீதிவ்யா காட்சிகளை விட, சிவகார்த்திகேயன்-சத்யராஜ் காட்சிகள் பலரும் விரும்பி பார்க்கப்படும் காட்சிகளாக மைந்தது.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் நடிகர் சூரிக்கும் காமெடியில் ஒரு நல்ல பரிமாணத்தை கொடுத்தது என்றே சொல்லலாம்.

சத்யராஜும் சிவணாண்டியாக வழக்கம் போல் தனது நக்கலான நடிப்பில் கலக்கி இருப்பார்.

2007ஆம் ஆண்டு திருத்தம் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனர் ஆனவர் பொன்ராம். அதன் பிறகு 2013ஆம் ஆண்டு வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தை எடுத்தார். அதன் பிறகு சிவகார்த்திகேயன் கூட்டணியிலேயே ரஜினி முருகன், சீமராஜா திரைப்படங்களை எடுத்தார். இப்பொழுது மக்கள் செல்வன் விஜய் சேதுபதியுடன் கூட்டணி சேர்ந்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் 2ஆம் பாகம் எடுக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அதை சிவகார்த்திகேயன் திட்டவட்டமாக மறுத்தார்.

ஆனால் தற்போது இயக்குனர் பொன்ராம் வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

 

சிவகார்த்திகேயன் தற்பொழுது மெச்சூரிட்டி ஆகிவிட்டதால் வளர்ந்து வரும் இளம் கதாநாயகர்களை வைத்து வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்படும் என கூறியுள்ளார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Comment