பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு பிறகு ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் அடுத்த பிரம்மாண்ட திரைப்படம்

0
151
S. Shankar
S. Shankar

பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு பிறகு ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் அடுத்த பிரம்மாண்ட திரைப்படம்

ஆயிரம் கோடி பட்ஜெட்டில் வேள்பாரி நாவலை  திரைப்படமாக இயக்குனர் ஷங்கர் படமாக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் வரலாற்று கதைகளை திரைப்படமாக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடந்து வண்ணமே உள்ளது. அந்த வகையில் தென்னிந்தியாவில் தயாரான பாகுபலி, ஆர்.ஆர்.ஆர், கேஜிஎப் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை மிரட்டியது.

அந்த வகையில் பாகுபலி திரைப்படத்தை தொடர்ந்து தமிழில் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் மிகப் பிரமாண்டமாக உருவாகியுள்ளது. சமீபத்தில் இத்திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு நடைபெற்றது.

இவ்வாறு பல ஆயிரம் கோடி செலவில் மிகவும் பிரமாண்டமாக உருவாகும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் தமிழ் திரையுலகை சேர்ந்த பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இதேபோல மிகவும் பிரம்மாண்ட முறையில் தமிழில் அடுத்த ஒரு திரைப்படம் உருவாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்தை இயக்குனர் சங்கர் இயக்குவதாகவும், நடிகர் சூர்யா கதாநாயகனாக நடிப்பதாகவும் கூறப்படுகிறது.

Suriya
Suriya

பொன்னியின் செல்வன் திரைப்படத்தைப் போலவே இதுவும் மிகவும் பிரமாண்டமான முறையில் சுமார் 1000 கோடி பட்ஜெட்டில் தயாராக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த படமானது பிரபல எழுத்தாளரும், நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் எழுதிய வேள்பாரி என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

தற்போது இந்தப் படத்தை எடுப்பதற்கான முதற்கட்ட பணிகளை துவக்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தை இயக்கவுள்ள இயக்குனர் சங்கர் தற்போது இந்தியன் 2 திரைப்படத்தை இயக்கி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு அடுத்து தமிழில் உருவாகவுள்ள மிகவும் பிரமாண்டமான திரைப்படம் ஆகும்.

Previous articleகல்லூரி சென்ற மாணவிக்கு நடந்தது என்ன?போலீசார் தீவிர விசாரணை!
Next articleஒரே போன் தான் டோர் டெலிவரியில் கஞ்சா! போலீசாரிடம் வசமாக சிக்கிய வாலிபர்!