இயக்குனர் சங்கரின் நிறைவேறாமல் போன ஆசை :-

Photo of author

By Rupa

இயக்குனர் சங்கரின் நிறைவேறாமல் போன ஆசை :-

Rupa

Director Shankar's unfulfilled wish :-
ஈரம் படத்தை ஹிந்தியில் மிகப் பிரம்மாண்டமாக ரீமேக் செய்ய இயக்குனர் சங்கர் ஆசைப்பட்ட நிலையில், தற்பொழுது வரை அது நிறைவேறவில்லை.
இப்படத்திற்கு தயாரிப்பாளராக சங்கர் மற்றும் இயக்குநராக அறிவழகன் இணைந்து  ஆதி மற்றும் சிந்து மேனனை வைத்து இப்படத்தை உருவாக்கியுள்ளனர்.
இப்படத்தில் , சிந்து மேனனின் கல்லூரித் தோழர் ஆதி. நட்பு கவிதையான சில சந்திப்புகளுக்குப் பின் காதலாகிறது. அடுத்து கல்யாணத்துக்குப் போகும்போது சிந்துவின் தந்தை ஆதியின் வேலையைக் காட்டி (போலீஸ்) பெண்தர மறுக்க, நந்தாவுக்கு கழுத்தை நீட்டுகிறார் சிந்து. இதன் பின் அவர்களின் வாழ்க்கை எப்படி நகர்ந்தது என்பதே இக்கதை. தமிழ் திரையுலகில் இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
ஆரம்பக் காட்சிகள் மனதுக்குள் பெரும் ஆச்சரியக் குறிகளை எழுப்பும் அளவு திறமையாக, இறுக்கமாகப் படமாக்கப்பட்டுள்ளன.
கிராமங்களில் பாட்டிகள் சொல்லும் பேய்க் கதைதான்… ஆனால் அதையே நவீன உத்திகளுடன் அழுத்தமாகக் காட்சிப்படுத்தி முதல் படத்திலேயே வெற்றிபெற்றுள்ளார் அறிவழகன்.