நீ நடிக்க கூடாது என்று சொன்ன இயக்குனர்! புரிந்து கொண்ட சிவாஜி!

0
276
#image_title

சிவாஜி நடிப்பில் திலகம், நாயகன் நடிப்பின் ராட்சசன் என்று அனைவருக்கும் தெரியும். எந்த ஒரு காட்சியில் நீ நடிக்க வேண்டாம் என்று இயக்குனர் பிரசாத் சொல்லிய சம்பவத்தின் கதைதான் இது.

 

இயக்குனர் எல்.வி. பிரசாத் இயக்கிய படம் “இருவர் உள்ளம்” அந்த படத்திற்காக சிவாஜியும் சரோஜா தேவியும் ஒரு காட்சிக்காக நடித்துக் கொண்டிருந்தார்கள்.அப்பொழுது அந்த  காட்சியில் சரோஜா தேவிக்கு தான் முக்கியத்துவம்.

 

அவர் தான் அந்த காட்சியை டாமினேட் செய்வார். அந்த காட்சியில் சிவாஜியும் நடித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது அவருக்குள் அவரே சொல்லி கொள்கிறார் நான் நடித்து எப்படியும் அவரை ஜெயித்து விடுவேன் என்று நினைத்து நடித்துக் கொண்டிருக்கிறார்..

 

அப்போது இயக்குனர் பிரசாத் ,கட்,கட் என்று சொல்லி நிறுத்தி உள்ளார்  , அப்படியே சிவாஜி அவர்களை வெளியே அழைத்துக்கொண்டு போய்.

 “சிவாஜி ,நீ ஒரு நல்ல நடிகன். நீ நன்றாக நடிக்கிறாய். ஆனால் நீ இந்த காட்சியில் நன்றாக நடித்தால் , நாம் எடுக்கும் காட்சி வீணாகி ,கதையின் போக்கே மாறிவிடும். அதனால் நீ பேசாமல் இருக்க வேண்டும். சரோஜா தேவி நடிக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் படமே கெட்டு விடும்” என்று சொல்லியுள்ளார்.

 

இந்த அனுபவம் சிவாஜிக்கு ஒரு பாடமாக அமைந்தது. படத்தில் நடிப்பது என்பது முக்கியமல்ல; கதைப்படி எந்த காட்சியில் நாம் நடிக்காமல் இருக்க வேண்டும் என்பதும் முக்கியம். என்று பேட்டி ஒன்றில் தெரிவித்து இருந்தார்.

Previous articleஇந்த சேமிப்பு திட்டம் மாதம் ரூ.9250 வரை பெறலாம்!
Next articleஇளையராஜாவின் முதல் படம் ஓடக்கூடாது என்று வேண்டிய நடிகை ஏன் தெரியுமா?