AK 64 படத்தின் டைட்டில்!! இயக்குனர் சிவா கொடுத்த  கி வேர்ட்!! கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள்!!

Photo of author

By Sakthi

AK 64 Movie Title:நடிகர் அஜித்தின் 64 வது படத்தை இயக்க உள்ளார் இயக்குனர் சிறுத்தை சிவா.

சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற படம் தான் நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கிய படம் கங்குவா. அடுத்தாக இயக்குனர் சிவா அஜித் 64 வது படத்தை இயக்க உள்ளார். இந்த தகவலை கங்குவா திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அறிவித்து இருந்தார்.  இது அஜித் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

இந்த நிலையில்தான் நடிகர் அஜித் குமார் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய இரண்டு திரைப்படங்களில் நடித்து வருகிறார்.இயக்குனர்  மகிழ் திருமேனி  விடாமுயற்சி படத்தின்  இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.  இந்த படம் வரும் 2025 ஆம் ஆண்டு பொங்கலுக்கு திரைக்கு வர இருக்கிறது என  தகவல் வெளியாகி இருக்கிறது.

மேலும்  குட் பேட் அக்லி படமும் அதே ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் வெளியாகும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.  இரண்டு படங்களை முடித்து விட்டு நடிகர் அஜித் குமார் பைக் ரேஸ் செல்கிறார் என்ற தகவல் வெளியாகி வருகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு அஜித் குமார் பைக் ரேஸ்   செல்ல உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பிறகு இயக்குனர் சிவாவுடன் AK64 படத்தின்  இணைய இருக்கிறார் அஜித். இயக்குனர் சிவா இதற்கு முன்பாகவே அஜித் உடன் இணைந்து வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என நான்கு வெற்றிப் படங்களை கொடுத்து இருக்கிறார். இதனால் மீண்டும் இயக்குனர் சிவா மற்றும் அஜித் கூட்டணி படம் வெற்றிப் படமாக இருக்கும் என கருதப்படுகிறது.

சிவா அஜித் குமார் வைத்து இயக்கிய அனைத்து படங்களும் “வி ” என்ற எழுத்தில் தொடங்கும் பெயர்களாக இருக்கிறது. இதனால் AK64  படம் “வி” என தொடங்கும் வார்த்தையாக இருக்கும் என ரசிகர்கள்  சமூக  வலைத்தளத்தில் தெரிவித்து வருகிறார்கள்.  மேலும்  AK64    படத்தின் பெயர் என்னவாக இருக்கும் என கமெண்ட் செய்யவும். உங்களின்  அஜித்  நண்பர்களுக்கு இச் செய்தியை பகிரவும்.