சிம்புவின் மாஸ் ஹிட் ‘மாநாடு’ தெலுங்கில் ரீமேக்… இயக்குனர் யார் தெரியுமா?

0
87

சிம்புவின் மாஸ் ஹிட் ‘மாநாடு’ தெலுங்கில் ரீமேக்… இயக்குனர் யார் தெரியுமா?

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் கடந்த ஆண்டு நவம்பர் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் மாநாடு.  இந்த படத்தில் நடிகர் சிம்புவுடன், எஸ்ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்டவர்கள் இணைந்து நடித்திருந்தனர். இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தொடர்ந்து தோல்விப் படங்களாக நடித்து வந்த சிம்புவுக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக மாநாடு அமைந்தது. சென்னையில் உள்ள ஒரு திரையரங்கில் மாநாடு திரைபடம் வெளியாகி 100 நாட்கள் ஓடி சாதனைப் படைத்தது.

மேலும் இந்த வெற்றியால் அவரின் மார்க்கெட் பல மடங்கு அதிகமாகி சிம்புவின் திரை வாழ்வில் இது ஒரு முக்கியமான படமாக அமைந்தது. மாநாடு படத்தை தொடர்ந்து தற்போது சிம்புவின் கைவசம் மஹா, வெந்து தணிந்தது காடு, பத்து தல ஆகிய படங்கள் உள்ளன.

பிளாகபஸ்டர் ஹிட் ஆன மாநாடு திரைப்படத்தின் ஒட்டுமொத்த ரீமேக் உரிமையை தெலுங்கு சினிமாவின் சுரேஷ் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதையடுத்து முதலில் தெலுங்கில் இந்த படத்தை ரீமேக் செய்ய உள்ளனர். இதற்கான வேலைகள் தொடங்கியுள்ள நிலையில் தெலுங்கிலும் படத்தை இயக்குனர் வெங்கட் பிரபுவே இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. தற்போது நாக சைதன்யா நடிக்கும் படத்தை இயக்கும் அவர் அதன் பின்னர் இந்த ஆண்டு இறுதியில் இந்த படத்தை இயக்குவார் என சொல்லப்படுகிறது.