இயக்குனர் வெற்றிமாறனின் அன்பு பரிசு.. உதவி இயக்குனர்கள் ஆச்சர்யம்!!

Photo of author

By Vijay

இயக்குனர் வெற்றிமாறனின் அன்பு பரிசு.. உதவி இயக்குனர்கள் ஆச்சர்யம்!!

தமிழ் திரைப்பட உலகில் வெற்றி பட இயக்குனர்கள் வரிசையில் தொடர்ந்து முதல் இடத்தில் இருந்து வருபவர் இயக்குனர் வெற்றிமாறன். இவரது படங்கள் அனைத்தும் வித்தியாசமான கதை அம்சம் கொண்ட தனி தன்மையுடன் இருக்கும், அந்த வரிசையில் தற்போது நடிகர் சூரியை வைத்து விடுதலை என்ற திரைபடத்தை எடுத்துள்ளார்.

தமிழகம் முழுவதும் நேற்று வெளியான விடுதலை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. இதனிடையே படத்தை பார்த்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் படத்தின் இயக்குனர் வெற்றிமாறனை நேரில் அழைத்து வெகுவாக பாராட்டினர். மேலும் இத்திரைபடத்திற்கு இசைஞானி இளையராஜா தனது இசையால் மெருகேற்றி உள்ளார்.

படத்தில் நடித்த ஒவ்வொரு நடிகர்களும் தங்களது திறமையான நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளனர், படத்திற்கு கூடுதலாக பலம் சேர்ப்பது விஜய் சேதுபதியின் அட்டகாசமான நடிப்பு, படத்தின் வெற்றிக்காக தன்னுடன் பாடுபட்ட இருபத்தைந்து உதவி இயக்குனர்களுக்கு இயக்குனர் வெற்றிமாறன் தனது சொந்த செலவில் உத்திரமோரூர் பகுதியில் ஒரு கிரௌண்ட் நிலத்தை அனைவருக்கும் வாங்கி கொடுத்துள்ளார்.

அனைவருக்கும் தான் கொடுத்துள்ள இந்த நிலத்தை யாரும் விற்ககூடாது எனவும், வீடு கட்டுங்கள் அல்லது அந்த நிலத்தில் விவசாயம் செய்யுங்கள் என தனது உதவி இயக்குனர்களுக்கு கூறியுள்ளார். ஒருபடம் வெற்றி பெற்றாலே கார் பைக் என கொடுக்காமல், அனைவரும் பயன்பெறும் வகையில் நிலம் வாங்கி கொடுத்து அதில் விவசாயம் செய்யுங்கள் என கூறி இருப்பது வித்தியாசமான ஒன்றாக பார்க்கப்படுகிறது .