” கடந்த 2023 ஆம் ஆண்டு விடுதலை படம் நடிகர் சூரி நடிப்பில் பெரும் வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து விடுதலை 2 படம் வெற்றிமாறனின் இயக்கத்தில் சமீபத்தில் வெளியானது”. இப்படத்தில் ‘விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியார்’ ஆகியோரின் நடிப்பில் வெளியாகி உள்ளது. முதல் பாகத்தின் தொடர்ச்சியாகவே அமைந்துள்ளது.
‘மக்கள் படைத்தலைவராக இருக்கும் பெருமாள் வாத்தியாரின் ( விஜய் சேதுபதி) ஆரம்ப வாழ்க்கை குறித்து அமைந்துள்ளது’ இப்படம். இது விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. ஆனால், இப்போதுதான் வசூல் ரீதியாக அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. இந்தப் படத்துக்காக படக் குழுவினர் கடின உழைப்பை வெளிப்படுத்தியுள்ளனர் என படம் வெளியாக முன்னர் வெற்றிமாறன் கூறியிருந்தார்.
‘படம் ஓடிடியில் வெளியானதை தொடர்ந்து வெற்றிமாறன் பேட்டி ஒன்று அளித்துள்ளார். அதில் படம், கூடுதலாக ஒரு மணி நேரம் இருக்கும் எனவும், மேலும் படத்தின் ஆரம்பத்தில் உள்ள 8 நிமிட காட்சியை கட் செய்துள்ளோம் எனவும் தெரிவித்தார்’. விடுதலை மற்றும் ”விடுதலை 2 ஆகிய இரு படங்கள் சேர்த்து மொத்தமாக எட்டு மணி நேரம் கதை இருக்கிறது. இக்கதையை வைத்து நாலு பார்ட் செய்திருக்கலாம்” எனவும் பேசி உள்ளார் இயக்குனர் வெற்றிமாறன்.