இயக்குனர் வெற்றிமாறனை மேடையில் கோபப்படுத்திய உதவி இயக்குனர்கள்!! சட்டென முடிக்கப்பட்ட உரை!!

Photo of author

By Gayathri

இயக்குனர் வெற்றிமாறனை மேடையில் கோபப்படுத்திய உதவி இயக்குனர்கள்!! சட்டென முடிக்கப்பட்ட உரை!!

Gayathri

Director Vetrimaranai angered the assistant directors on stage!! Just finished text!!

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான பொல்லாதவன் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குனர் வெற்றி மாறன் அவர்கள்.

இயக்குனர் வெற்றிமாறனும் தனுஷும் இணைந்த திரைப்படமான ஆடுகளம் மற்றும் அசுரன் ஆகிய இரண்டு படமும் தேசிய விருதினை இவர்களுக்கு பெற்று தந்தது. இந்த திரைப்படம் மட்டும் இன்றி வடசென்னை திரைப்படம் இவர்கள் கூட்டணியில் உருவானது தான்.

அதன்பின் காமெடி நடிகர் சூரியை கதையின் நாயகனாக மாற்றி விடுதலை படத்தை இயக்கினார். இந்த படத்தில் விஜய் சேதுபதியும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது.

இந்த திரைப்படம் ஆனது கடந்த இரண்டு வருடங்களாக படப்பிடிப்பு மேற்கொள்ளப்பட்டு தற்பொழுது படப்பிடிப்பு முடிந்த நிலையில், படத்திற்கான விழா அரங்கேறியுள்ளது. இந்த விழாவின் மேடையில் தான் வெற்றிமாறன் அவர்கள் கோபப்பட்டு தன்னுடைய உரையை சட்டென முடித்து அமர்ந்திருக்கிறார். இது குறித்து இங்கு காண்போம்.

டிசம்பர் 20ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தில் இடம் பெற்ற ஒரு பாடலும் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்த படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

இந்த விழாவில் இயக்குனர் வெற்றிமாறன் அவர்கள் பேசியதாவது :-

இந்த படத்தில் பணிபுரிந்த என் உதவி இயக்குனர்கள், புரடெக்‌ஷன் டீம் என எல்லோருக்கும் நன்றி’ என சொன்னார். அப்போது, உதவி இயக்குனர்களின் பேரை சொல்லுங்கள் என அவரின் உதவியாளர்கள் சொல்ல ‘ஏன்டா டீம்னு சொன்னா எல்லாரும்தானடா என கேட்டார் வெற்றிமாறன்.

ஆனாலும், அவர்கள் ஏதோ சொல்ல சட்டென கோபமடைந்த அவர் ‘நன்றி’ என சொல்லிவிட்டு போய் தனது இருக்கையில் அமர்ந்து விட்டு விஜய் சேதுபதியிடம் ஏதோ கோபமாக பேசிக் கொண்டிருந்தார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.