2012 ஆம் ஆண்டு வெளியான போடா போடி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் இயக்குனர் விக்னேஷ் சிவன். இப்படத்திற்கு முன் இவர் பல படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்து இருக்கிறார். மேலும் இவர் சிறந்த பாடலாசிரியராகவும் விளங்குவது குறிப்பிடத்தக்கது.
இதற்கு உதாரணமாக ஜெயிலா திரைப்படத்தில் வரும் ரத்தமாரே பாடல் ரசிகர்களிலேயே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது மட்டுமின்றி சிறந்த பாடல் ஆசிரியர் காண விருதையும் பெற்றுக் கொடுத்துள்ளது. இந்த பாடலை எழுதியவர் விக்னேஷ் சிவன் ஆவார்.
தன்னுடைய ஆரம்ப காலகட்டத்தில் விக்னேஷ் சிவன் என்பவர் மிகப்பெரிய இயக்குனர் அல்ல. அந்த சமயத்தில் இவர் ஆர் ஜே பாலாஜி அவர்களுக்கு இரவில் 1:30 மணிக்கு போன் செய்துள்ளார். அந்த நேரத்தில் தன் குடும்பத்தோடு தூங்கிக் கொண்டிருந்த ஆர் ஜே பாலாஜி அவர்கள் அழைப்பை எடுத்து பேசும் பொழுது விக்னேஷ் சிவன் பேசுகிறேன் என இயக்குனர் தெரிவித்திருக்கிறார். அதற்கு ஆர் ஜே பாலாஜி அவர்கள் யாராயிருந்தா என்னடா என்று கேட்டு செல்போன் அழைப்பை துண்டித்துள்ளார்.
விக்னேஷ் சிவனின் ஆரம்ப காலகட்டத்தின் பொழுது ஆர்ஜே பாலாஜி அவர்கள் ஆர்.ஜே ஆகவே பணியாற்றி இருந்து வந்துள்ளார். மேலும் வீட்டிற்கு சென்றால் செல்போன் பயன்படுத்தும் பழக்கமானது ஆர் ஜே பாலாஜிக்கு சுத்தமாக இல்லை என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
மறுநாள் காலையில் விக்னேஷ் வேனுக்கு ஆர் ஜே பாலாஜி அவர்கள் செல்போனில் அழைப்பு விடுத்த போது பதிலுக்கு விக்னேஷ் சிவன் அவர்கள் எதுவும் பேசாமல் இருந்திருக்கிறார். இதுகுறித்து பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார் ஆர்.ஜே பாலாஜி அவர்கள்.
எப்பொழுதும் விக்னேஷ் சிவன் அவர்கள் திருப்பி அடிக்க வேண்டும் என்றால் அன்பால் மட்டுமே அடிப்பார் என்று ஆர்.ஜே பாலாஜி கூறியிருக்கிறார். அதற்கு உதாரணமாக, அவர் காலை மிதித்து நாம் சாரி கேட்காமல் போனால் ரெண்டு பக்க மெசேஜை கவிதையால் டைப் செய்து என் காலை மிதித்து சாரி கேட்காமல் போனீர் என்று சொல்லக் கூடிய ஆள்.ஐய்யோ இதுக்கு பத்து தடவை சாரி கேட்டிருக்கலாம் என்று தோன்றும். அப்படி அன்பாலேயே அடிப்பார் என்று ஆர் ஜே பாலாஜி கூறியுள்ளார்.