நயன்தாராவை நான் அப்படிதான் பார்த்தேன்!! பிரபல இயக்குனர் வாக்கு மூலம்!!

Photo of author

By Sakthi

நயன்தாராவை நான் அப்படிதான் பார்த்தேன்!! பிரபல இயக்குனர் வாக்கு மூலம்!!

Sakthi

Director Vignesh Sivan shared an interesting incident with actress Nayanthara

 VIGNESHSIVAN & NAYANSTHRA:இயக்குனர் விக்னேஷ் சிவன்,நடிகை நயன்தாராவுடன்  நடந்த சுவாரஸ்யமான நிகழ்வை பகிர்ந்தார்.

நடிகை நயன்தாரா தமிழ் திரையுலகில் நடிகர்களுக்கு இணையாக உச்ச நிலைக்கு சென்றவர்.  நீண்ட நாட்களாகவே திருமணம் செய்யாமல் இருந்த  நயன்தாரா
இயக்குனர் விக்னேஷ் சிவனை காதல் திருமணம் செய்து கொண்டார். அதிகமாக திரையுலகில் பேசப்பட்டு வரும் ஜோடிகளாக இவர்கள வலம் வருகிறார்கள்.

நயன்தாரா,விக்னேஷ் சிவன் இருவருக்கும் இடையில் திருமணத்திற்கு முன்பு நடந்த ஒரு சுவாரஸ்யமான ஒரு விஷயத்தை பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்து  இருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது  நானும் ரவுடிதான் திரைப்பட ஷூட்டிங் பாண்டிச்சேரி கடற்கரையில்
நடைபெற்றது.

இந்த ஷூட்டிங்கில் தான் நடிகை நயன்தாராவை முதன் முதலில் நான் பார்த்ததாக கூறினார்.  மேலும் நான் ஒன்றும் உத்தமன் இல்லை என்று குறிப்பீட்டு நடிகை நயன்தாராவை பார்த்த விதத்தை கூறினார். அவர் மீது என்னுடைய பார்வை அழகை ரசிப்பதற்காக அல்ல, அதனால்  தான் நானும் நயன்தாராவும் காதலித்து இருக்கிறோம்.

எங்கள் காதல் கல்யாணத்தில் முடிந்து இருக்கிறது. நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் காதலிக்க தொடங்கியதாக கூறினார்.இது குறித்து நடிகை நயன்தாராவிடம் கேட்டபோது ஆமாம் நானும் ரவுடிதான் திரைப்பட ஷூட்டிங்கில் தான் இயக்குனர் விக்னேஷ் சிவனை சந்தித்தேன்.

அவர் முதன் முதலில் என்னை பார்த்த போது மிகவும் க்யூட்டாக இருந்தது. திரைப்பட காட்சிகளை நடிப்பதற்காக விளக்கிய விதம் எனக்கு ரொம்ப பிடித்து இருந்தது. அதில் இருந்து தான் நாங்கள் காதலிக்க ஆரம்பித்தோம் என்று சுவாரசிய தகவலை பகிர்ந்தார் நடிகை  நயன்தாரா.