விக்ரம் மீது காண்டில் இருக்கும் இயக்குனர்கள்! நீங்கள் இப்படி பண்ண கூடாது!

0
207
Directors who are mad at Vikram! You should not do this!
Vikram has been admitted to a hospital in Chennai. File photo

விக்ரம் மீது காண்டில் இருக்கும் இயக்குனர்கள்! நீங்கள் இப்படி பண்ண கூடாது!

விக்ரம் நடித்த கடாரம் கொண்டான் படத்தை அடுத்து வந்த படங்கள் அனைத்தும் சரிவர ஓடவில்லை. இவரது மகனுடன் சேர்ந்து மகான் என்ற படத்தில் நடித்தார். இந்த படத்தை இவரது ரசிகர்கள் பெருமளவு எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் அப்படம் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு ஓடவில்லை. இது அமேசான் ப்ரைமில் வெளிவந்தது. அதனை அடுத்து பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இவர் நடித்த மற்றொரு படமான கோப்ரா வெளியாக உள்ளது. இந்தப் படத்தை தான் பெரும் அளவு விக்ரம் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளார்.இந்த படமும் சரிவர ஓடவில்லை என்றால் இவரது மார்க்கெட் மிகவும் குறைந்துவிடும்.

இதனை சமாளிக்கும் விதத்தில் புதிய வெப் சீரிஸ் ஒன்றை எடுக்க உள்ளார். ஆனால் அந்த வெப் சீரிஸ்க்கு புதுமுக வரும் இயக்குனர்களுக்கு வாய்ப்பளிக்க போவதில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். விக்ரம் முன்னதாகவே ஒரு நிகழ்ச்சியின் மேடையில் தான் புதுமுக இயக்குனர்களுக்கு வாய்ப்பளிக்க மாட்டேன் என்று தெரிவித்தார். புதிய இயக்குனர்களுக்கு இது பெரும் அடியாக இருந்தது. மேலும் புதுமுக இயக்குனர்களுக்கு பெருமகிழ்ச்சியாகவும் இருந்தது. தற்போது தமிழ் சினிமாவில் வந்த புதுமுக இயக்குனர்கள் பலர் பல வெற்றி படங்களை கொடுத்து வருகின்றனர்.

இந்த சூழலில் ஆவது தனது எண்ணத்தை விக்ரம் மாற்றியிருப்பார் என்ற எண்ணிய நிலையில் புதுமுக இயக்குனர்கள் எண்ணினர். ஆனால் அவர் சிறிதும் மாறாமல் முன்பு கூறியது போலவே புதுமுக இயக்குனர்களுக்கு வாய்ப்பளிக்க மாட்டேன் என்று தெரிவித்துள்ளார். இதனால் அவர்கள் விக்ரம் மீது கோபத்தில் உள்ளனர். விக்ரம் திரையுலகிற்கு வரும் பொழுதும் அவரை வைத்து இயக்கியது புதுமுக இயக்குனரான பாலா தான். இதனை அவர் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது என்று கூறி வருகின்றனர். சேது படம் மட்டும் விக்ரம் நடிக்கவில்லை என்றால் இவரது முகம் தெரியாமல் கூட போயிருக்கும் என்றும் பலர் வசைப்பாடி வருகின்றனர்.

Previous articleஆன்லைன் சூதாட்ட மோகம்! தனது ஆசை மனைவியையே கத்தியால் குத்தி பிளாஸ்டிக் கவரில் கட்டிய  அவலம்!
Next articleசாக்லேட்டை சாப்பிட தானே முடியும்! இப்படி கூட செய்யலாமா நீங்களும் செய்து பாருங்கள்!