கொரோனா தடுப்பூசி போட்டதால் ஏற்பட்ட விபரீதம்! அச்சத்தில் பொதுமக்கள்!
கொரோனா தொற்றானது கடந்த 2 வருடங்களாக மக்களை அதிகளவு பாதித்து வருகிறது.மக்கள் முதல் அலை மற்றும் இரண்டாம் அலை என கடந்து தற்பொழுது வந்துள்ளனர்.இரண்டாம் அலையில் தான் இந்தியா பெருமளவு பாதிக்கப்பட்டது.அதனையடுத்து மக்கள் உயிர்களை காப்பாற்ற கொரோனா தடுப்பூசி நடைமுறைக்கு வந்தது.மக்கள் முதலில் தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கு தயங்கினர்.நாளடைவில் மக்கள் தங்கள் உயிரை காத்துக்கொள்ள தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.அதுமட்டுமின்றி பல தரப்பினர்,தடுப்பூசி செலுத்திக்கொண்டால் நமது உடல் அதை ஏற்றுக்கொள்ள வில்லை என்றால் உயிர் போகும் அபாயம் ஏற்படும் என கூறி வந்தனர்.
குறிப்பாக நடிகர் விவேக் அவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டு அடுத்த நாள் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.இவர் தடுப்பூசி செலுத்திக்கொண்டதிற்கும்,மாரடப்பிற்கும் எந்த வித தொடர்பும் இல்லை என்று மருத்துவர்கள் கூறினார்.இருப்பினும் மக்கள் அதிகளவு அச்சமடைந்தனர்.நாளடைவில் தமிழக அரசு கொரோனா தடுப்பூசி செலுத்துவதின் முக்கியத்துவத்தை மக்களுக்கு எடுத்துக்கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.அவ்வாறு ஏற்படுத்தியதில் நல்ல பலன் அளித்தது.அதுமட்டுமின்றி வாரம் தோறும் மெகா தடுப்பூசி முகாம் என்ற ஒன்றை அமர்த்தி தடுப்பூசி போடும் பணியை மேற்கொண்டனர்.அந்த திட்டம் தொடர்ந்து நல்ல பலனை அது அளித்ததால் நேற்று நான்காவது வாரமாக தொடங்கப்பட்டது.
தற்பொழுதுஉள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.தேர்தலானது 9 மாவட்டங்களில் இரு கட்டங்களாக நடைபெற உள்ளது.அதனால் தேர்தல் நடக்கும் 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் கொரோனா மெகா தடுப்பூசி முகாம் 4 வது வாரம் தொடங்கப்பட்டது.அவ்வாறு நேற்று திண்டுக்கல்லில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.அவ்வாறு நடைபெற்றதில் பல மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.அவ்வாறு செலுத்தியதில் 52 வயது தக்க விவசாயி ஒருவர் தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.அவர் செலுத்திய உடனே வீட்டிற்கு வந்ததும் தலை சுற்றுவதாகவும்,நெஞ்சு வலிப்பதாகவும் கூறி இருக்கிறார்.அதனையடுத்து அவரை அங்குள்ள ஆரம்ப சுகாதர மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் முன்கூட்டியே இறந்ததாக கூறினார்.தடுப்பூசி செலுத்திக்கொண்டு 2 மணி நேரத்திலேயே விவசாயி ராஜ உயிரிழந்த சம்பவம் அங்குள்ள மக்களை பெரும் அச்சம் அடைய செய்துள்ளது.